Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

திருவிழிமிழலை விழிநாதர் திருக்கோவில்

  • April 27, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் – பூந்தோட்டம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள திருவிழிமிழலை எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம். சங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் (தற்போது, நீடாமங்கலம் ) தலைநகராகக் கொண்டு எவ்விஎன்னும் வள்ளல் ஆண்டுவந்தான். இதுவே திருவிழிமழலையாகும். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி […]

செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்

  • April 26, 2026
  • 0 Comments

இலங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ‘எதிர்காலத்திற்கு அடிவைப்போம்’ எனும் தொனிப்பொருளில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட ‘தாழ்தள” பஸ் சேவை நேற்று மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக் கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் இதன் போது […]

அறிந்து கொள்வோம்

திருவிற்குடி ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

  • April 25, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் , மயிலாடுதுறை – திருவாரூர் பேருந்து சாலையில், காங்கலாஞ்சேரிக்கு அடுத்துள்ள திருவிற்குடி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: நாயன்மார்கள் பாடல் பெற்றதால் 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. சோழர் காலத்தில் கற்கோவிலாக மாற்றப்பட்டு, பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் விரிவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. ஜலந்தராசுரன், பிரம்மாவிடம் அழியாத வரம் பெற்றிருந்தான்அவனது மனைவியான பிருந்தை கற்பு நெறியில் பிழையாதவரை அவனுக்கு அழிவில்லை எனவும் வரமிருந்தது. தேவர்களின் துயரம் தாங்காத சிவபெருமான், […]

செய்திகள்

இலங்கையில் தொலைபேசி பயன்பாடு அதிகரிப்பு

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையில் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு 100 பேருக்கும் சுமார் 147 கையடக்கத் தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது. அதேபோன்று, ஒவ்வொரு 100 பேருக்குமான நிலையான தொலைபேசிகளின் எண்ணிக்கை 12.1 ஆகக் காணப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொடர்பாடல் வசதிகள் விரிவடைந்து வருவதையே இந்தத் […]

அறிந்து கொள்வோம்

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில்

  • April 23, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 5000 ஆண்டுகள் பழமையான தலம். ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூசித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூசிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியானமயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டுபிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்றவை சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன. இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. இக்கோவில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோவிலாக இருந்துள்ளது. சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய  செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை […]

செய்திகள்

மன்னாரில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி

  • April 22, 2026
  • 0 Comments

தொழில் தேடும் இளைஞர், யுவதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன் தலைமையில் இடம் பெற்ற இந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சியில் திணைக்கள தலைவர்கள், அரச மற்றும் தனியார் தொழில் வழங்குநர்கள், தொழில் பயிற்சி திணைக்கள அதிகாரிகள், வேலை வாய்ப்பு […]

அறிந்து கொள்வோம்

திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோவில்

  • April 21, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவண்டுதுறை எனுமிடத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு: பிருங்கி முனிவர் சிவபெருமானின் தீவிர பக்தர். மற்ற அனைத்து கடவுள்களைத் தவிர்த்து சிவனை மட்டுமே வழிபட்டார், இது பார்வதியை வருத்தப்படுத்தியது, இதைப் பார்த்த பார்வதி, சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து, அர்த்தநாரீஸ்வரரை உருவாக்கி, பாதியாக மாறினாள். இதனைக் கண்ட முனிவர் தேனீயாக உருவெடுத்து நடுவில் துளை போட்டு சுற்றி வந்து வணங்கினார்.இதனால் வருத்தமுற்ற தேவி. முனிவரை எப்போதும் தேனீயாக இருக்கும்படி சபித்தாள். தன் தவறை உணர்ந்த முனிவருக்கு. அன்னை […]

திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோவில்

  • April 19, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தலவரலாறு: கிருத யுகத்திலிருந்து உள்ள இக்கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் அமைந்துள்ளதுசோழர் கால கோவில்களானஇரண்டும், இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை. சூரியனின் தேரோட்டியான அருணன் அந்த பதவியைப் பெற மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் முயன்ற போது, சூரியனால் உடல் குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டு கேலி செய்யப்பட்டதால், சிவபெருமான் சூரியனை ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறு […]

அறிந்து கொள்வோம்

திருமீயாச்சூர் சகலபுவனேஸ்வரர் திருக்கோவில்

  • April 17, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமீயாச்சூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு: திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோவிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீயச்சூர் இளங்கோயில் என்றொரு தனிக்கோவில் உள்ளது. இதில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேசுவரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம். சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன.இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி […]

அறிந்து கொள்வோம்

மகாகாளநாதர் திருக்கோவில் திருமாகாளம்

  • April 16, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவிலும், பேரளம் எனுமூரிலிருந்து 7 கி, மீ தொலைவிலும் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையிலுள்ள திருமாகாளம் எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. மதங்கரிஷி என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்தார். அவருக்கு “ராஜமாதங்கி’ என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பெரியவளானதும், இறைவன் தோன்றி, “”வேண்டும் வரம் கேள் என்றார்”. அதற்கு அவள்,””நான் தங்களுடன் தினமும் […]