Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

  • January 17, 2019
  • 0 Comments

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத் தூதுவர் மாண்புமிகு ச.பாலச்சந்திரன் ஊர்வலமாக கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்டு புதிதாக கட்டப்பட்ட நுழைவாயிலை திறந்துவைத்தார். பின்பு கடந்தகாலத்தில் கடமை ஆற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் புத்தகவெளியீடும் இடம்பெற்றது.