Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Uncategorized

கணபதிப்பிள்ளை வைரமுத்து

  • May 24, 2026
  • 0 Comments

ஓய்வூ நிலை உதவி அரசாங்க அதிபர் (பூநகரி) புலோலி தெற்கையூம் புற்றாளையையூம் பிறப்பிடமாகவூம் வசிப்பிடமாகவூம் கொண்டவர். 2026.04.05 மாலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கின்றௌம். View full obituary →

செய்திகள்

மத்திய வங்கி அறிக்கை: ரூபாவின் மதிப்பு 5.6% வீழ்ச்சி

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி பாராளுமன்ற நிதிக் குழுவிடம் (COF) தெரிவித்துள்ளது. அதேவேளை, மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக 2026ஆம் ஆண்டில் புதிய பொருளாதார சவால்கள் உருவாகலாம் என்றும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வருகை தராததால், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற நிதிக் குழு கூட்டத்தில், […]

செய்திகள்

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ நியமனங்கள் புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்குமான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் 19-05-2026 அன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உடல் நலம்

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு சின்ன வெங்காயம்!

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பயன்படுத்தும் முறை :

செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். எனினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் நிலைப்பாடு  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் […]

செய்திகள் படைப்பாக்கம்

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலை

ஆஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பினர், ஆஸ்திரேலிய மத்திய அரசின் செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களை கான்பெராவில் உள்ள நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பாரம்பரியமும் நவீனமும் இணைந்த இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் கலைப்படைப்பான “கூத்தாடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் […]

கட்டுரைகள்

நமக்கு நாமே தோழராக…

பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மோடு கூடவே வருவது நாம் மட்டும் தான். ஆகவே, இந்த உலகத்தினையும் அதில் வாழும் மனிதர்களையும், நம் உறவுகளையும் பற்றிப் புரிந்து கொள்வதற்கு முன், நாம் நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம்மைப்பற்றி சரியாகப் புரிந்து கொண்டு நமக்கு நாமே நல்ல தோழராக வாழப் பழகி விட்டால் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக வாழலாம். பொதுவாகவே மனித மனம் தனிமையில் வாழப் பழக்கப்படவில்லை. எப்போதும் துணையாக, தோழமையோடு […]

செய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள உறுதிமொழி

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் உறுதி வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை பாரியளவிலான இரண்டு பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்நோக்க நேரிட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார். பொருளாதார அதிர்ச்சி நிலைமை தித்வாக புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றம் போன்ற பொருளாதார அதிர்ச்சிகளினால் இாலங்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த […]

செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய மழைக்கால நிலைமை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பைத் தொடர்ந்து, சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது. இரண்டு நாட்களாக நிலவும் கடும் மழை பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபாசேன இது […]

செய்திகள்

மின் கட்டணம் 18 வீதம் உயர்வு

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பிரிவினருக்கு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று முதல் இந்த கட்டணத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ள போதிலும், இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத்திருத்தத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது, 8 […]