Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

மகாகாளநாதர் திருக்கோவில் திருமாகாளம்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவிலும், பேரளம் எனுமூரிலிருந்து 7 கி, மீ தொலைவிலும் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையிலுள்ள திருமாகாளம் எனுமூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. மதங்கரிஷி என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்தார். அவருக்கு “ராஜமாதங்கி’ என்ற குழந்தை பிறந்தது. குழந்தை பெரியவளானதும், இறைவன் தோன்றி, “”வேண்டும் வரம் கேள் என்றார்”. அதற்கு அவள்,””நான் தங்களுடன் தினமும் திருமண கோலத்தில் இத்தலத்தில் இருக்க விரும்புகிறேன்,”என்று கூறி திருமணக்கோலத்தில் உள்ள தலம், அம்பன், அம்பாசூரன் இருவரையும் கொன்ற காளி பாவந்தீர இறைவனை இத்தலத்துப் பூசை செய்தார். மாகாளரிசியும் பூசித்த தலம்.

தலசிறப்புகள்:

இறைவர்- மகாகாளநாதர், மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்,
இறைவி – பட்சயாம்பிகை, ராஜமாதங்கி
தல மரம் : கருங்காலிமரம் , மருதமரம்,
தீர்த்தமாக மாகாள தீர்த்தம் உள்ளது.

சம்பந்தரால் பாடல்பெற்ற தலம். அம்பன், அம்பாசுரன் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சோமாசிமாற நாயனார் சோமயாகஞ் செய்த தலம். அட்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மகத்தி தோ‌சம் நீங்கிய தலம் இதுவாகும். இங்கு காளிகோயில் தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. வைகாசி மாதத்தில் சோமாசிமாறர் யாக உற்சவம் நடைபெறும். சிறிய உருவமுடைய பாணலிங்கம். குவளை சாத்தப்பட்டுள்ளது. திருமண தடையுள்ளவர்கள் அம்மனுக்கு  இரண்டு அரளி மாலை சாத்தி அதில் ஒன்றை தங்கள் கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள். சோமாசிமாற நாயனாரின் யாகத்தின்போது புலையர் வேடத்தில் வந்திருந்த ஐயனையும், அன்னையையும் சோமாசிமாறருக்கு குறிப்பால் உணர்த்திய விநாயகரை “அச்சந்தீர்த்த விநாயகர்” என்றழைக்கின்றனர்.

வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழவிற்கு எழுந்தருள்வதால் அன்றைய தினம் திருவாரூரில் தியாகராசருக்கு அபிசேக ஆராதனைகள் கிடையாது. இந்திரனின் தூண்டுதலால்சினம் கொண்ட விசுவாமித்திர முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.

அட்ட நாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோசம் நீங்கப் பெற்றது. நாகதோசம், புத்திரதோசம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிசேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்,

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்

You may also like

அறிந்து கொள்வோம்

Goggles & Shades for Girls

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut
அறிந்து கொள்வோம்

Best Natural and Organic Makeup

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut