Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

திருமீயாச்சூர் சகலபுவனேஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமீயாச்சூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோவிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீயச்சூர் இளங்கோயில் என்றொரு தனிக்கோவில் உள்ளது. இதில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேசுவரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம். சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன.இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோவில் திருப்பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

தலசிறப்புகள்:

மூலவர்: சகலபுவனேஸ்வரர், உற்சவர்: பஞ்சமூர்த்தி,
தாயார்:மேகலாம்பிகை, சவுந்தரநாயகி.
தலவிருட்சம்:
மந்தாரை, தீர்த்தமாக காளி தீர்த்தம் உள்ளது.
அப்பரால் பாடல்பெற்ற திருத்தலம் .

காளி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை, இக்கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில், பூசைக்குப் பிறகு அம்மனின் கொலுசு சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் பாராயணம் செய்து அம்பாளை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்

You may also like

அறிந்து கொள்வோம்

Goggles & Shades for Girls

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut
அறிந்து கொள்வோம்

Best Natural and Organic Makeup

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut