திருவிழிமிழலை விழிநாதர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் – பூந்தோட்டம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள திருவிழிமிழலை எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம். சங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் (தற்போது, நீடாமங்கலம் ) தலைநகராகக் கொண்டு எவ்விஎன்னும் வள்ளல் ஆண்டுவந்தான். இதுவே திருவிழிமழலையாகும். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி […]












