Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – அருளானந்தன் செல்லையா

  • February 7, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர். அம்கிகைநாதன் – சகோதரன் (+491632650166)கண்ணன் – சகோதரன் (+33659892238)அனோஷா – மகள் (+447949299746)தனேஸ்வரி – மனைவி (+447985236805)

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சின்னத்துரை தங்கராசா

  • February 5, 2026
  • 0 Comments

கம்பர்மலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தங்கராசா அவர்கள் 03/02/2026 அன்று காலமானார். இவர் அமரர் கணபதிப்பிள்ளை சின்னத்துரை மற்றும் அமரர் சின்னத்துரை சின்னம்மா ஆகியோரின் அன்பு மகனாவார். தகவல்: குடும்பத்தினர்

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – பேரம்பலம் கணபதிப்பிள்ளை

  • February 4, 2026
  • 0 Comments

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வேரற்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், ஆனந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், நடேசபிள்ளை மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தவக்குமார், சிவகுமார், வசந்தா, விஜயகுமார், ஜெயந்தி, தமயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுதர்ஷினி, சச்சிதானந்தம், யதுஷா, […]

செய்திகள்

இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் தொடக்கம்

  • February 4, 2026
  • 0 Comments

இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகளை இலங்கை தேர்தல் திணைக்களம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். 2026.02.02 இந்த வருடாந்திர வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தல் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் கிராம் அதிகாரிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று இந்த மீளாய்வு விவரங்களை திரட்டி வருகின்றனர். இந்த புதிய வாக்காளர் மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் உள்ளடக்கியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

வரலாற்றை புரட்டி எடுக்கும் தங்க விலை

  • February 4, 2026
  • 0 Comments

உலகச் சந்தையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. அதற்கமைய, 2026.01.29 அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. 2026.01.28 அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அமெரிக்க டொலரின் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதும், கையிருப்புகளைச் சேகரிப்பதும் தங்கத்தின் விலை […]

செய்திகள்

நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் பொங்கல் விழா!

  • January 30, 2026
  • 0 Comments

அம்பாறை, ஜன. 29 நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் உழவர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அறுவடை நிகழ்வு, புதிர் எடுத்தல், நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐ.எஸ்.ஏ.கமல் நெத்மினி ஆரம்பித்து வைத்தார். மேலும் […]

செய்திகள்

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

  • January 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், ஜன. 30 அன்று மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி, பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் “பாட்டொன்றைப் பாடுவோம்” சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் “பிறந்தநாள் சட்டை” சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கலை, இலக்கிய செயல்பாட்டாளர் சோ. தேவராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஆசியுரையை தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அதிபர் இ. புஷ்பரட்ணம், வெளியீட்டுரையை மக்கள் கலை இலக்கிய பேரவையின் செயலாளர் […]

செய்திகள்

யாழ். போதனா மருத்துவமனை தேசிய மருத்துவமனையாகிறது

  • January 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், ஜன. 23 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் – எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பில் நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற சுகாதார மேற்பார்வை குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் கூட்டம் மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் நடந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல […]

படைப்பாக்கம்

இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவான “கண்ணம்மா”

  • January 26, 2026
  • 0 Comments

முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணம்மா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு இதனை தெரிவித்தது. ஈழப்போராட்டத்தின் பாதிப்பையும் வலிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். 2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை […]