Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவான “கண்ணம்மா”

முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணம்மா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு இதனை தெரிவித்தது.

ஈழப்போராட்டத்தின் பாதிப்பையும் வலிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.

மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா), ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் இதில் நடித்துள்ளார்கள்.

காணொளி: https://www.facebook.com/share/v/16fd6fUSZg/

You may also like

படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்
படைப்பாக்கம்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று