திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தலவரலாறு: கிருத யுகத்திலிருந்து உள்ள இக்கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் அமைந்துள்ளதுசோழர் கால கோவில்களானஇரண்டும், இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை. சூரியனின் தேரோட்டியான அருணன் அந்த பதவியைப் பெற மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் முயன்ற போது, சூரியனால் உடல் குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டு கேலி செய்யப்பட்டதால், சிவபெருமான் சூரியனை ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறு […]












