Subscribe to our newsletter to get our newest articles instantly!
புலோலி தெற்கையும் புற்றாளையையும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து அவர்கள் 05/04/2026 அன்று மாலை 07.00 மணியளவில் காலமானார். இவர் ஓய்வு நிலை உதவி அரசாங்க அதிபராக (பூநகரி) கடையாற்றியுள்ளார். இவர்,கொம்மந்தறையைச் சேர்ந்த தங்கராணி அவர்களின் பாசமிகு கணவனாவார்.
உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) – நம்பிக்கையின் வெற்றிநாள் உயிர்த்த ஞாயிறு அல்லது ஈஸ்டர் ஞாயிறு என்பது கிறிஸ்தவ மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருநாளாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நம்பிக்கை, அன்பு மற்றும் புதிய வாழ்வின் ஆரம்பத்தை கொண்டாடும் நாளாக கருதப்படுகிறது. புனித வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். […]
உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விலைகளை விடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் உள்ள நாலந்தா மற்றும் களுதேவல கைத்தொழில் பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் காலணிகள், டைல்ஸ், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் போன்ற பொருட்கள், விதிக்கப்பட்ட வரிகளையும் மீறி […]
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இருநது தெற்கே 2 கி.மீ. தொலைவிலுமுள்ள திருப்பாம்புரம் எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது. திருக்கைலாயத்தில் ஒருமுறை விநாயகர். […]
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருப்பனையூர் எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: இத்தலம் தாலவனம், தளவனேசுவரம்இராஜேந்திர சோழப்பனையூர் எனப் பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர் என்பதால் இதற்கு .”தாலவனம் ” என்ற பெயர் வந்தது. தாளம் என்பதற்கு பனை என்ற பொருள். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தலசிறப்புகள்: மூலவர்: சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர். […]
இலங்கையின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று அந்தத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். நிலவும் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய […]