Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!

  • March 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 12 வலய மட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில் முதலாமிடத்தையும், 16 வயதுப்பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள்

உலகை ஆட்டம் காண வைத்த எரிபொருள்கள் விலையேற்றம்

  • March 13, 2026
  • 0 Comments

85 நாடுகள் பெரும் பாதிப்பு கொழும்பு, மார்ச் 12 மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலகளவில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளன. போர் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் குறைந்தது 85 நாடுகள் பெற்றோல் விலை உயர்வைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச எரிபொருள் விலை விவரங்களின்படி ஆசிய நாடுகள் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிக அதிகப்படியான உயர்வாக 50 வீத விலை உயர்வைப் பதிவு செய்துள்ளது. இங்கு […]

அறிந்து கொள்வோம் ஊர் புதினம்

பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA)

  • March 10, 2026
  • 0 Comments

யாழ். பல்கலை கழகத்தில் நடைபெற்ற 40 வது பட்டமளிப்பு விழாவில் 21.02.2026 அன்று பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பார்வை இல்லாத நிலையிலும், உறுதியான மனவலிமையும் விடாமுயற்சியும் கொண்டு அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார் தடைகள் அவரை தடுக்கவில்லை, அவை அவரை மேலும் வலிமையாக்கின.இன்று அவர் பெற்ற பட்டம், அவரது திறமை மற்றும் நம்பிக்கையின் வெற்றிச் சின்னம். அவரின் எதிர்காலம் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்துடன் இவர் புலமைப்பரிசில் பரிட்சையில் […]

தாயகத்து படைப்புகள் படைப்பாக்கம்

அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு

சலனப் பகிர்வு: அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு.மகிழ்வோடு வரவேற்று ஊக்கமளிப்போம். அந்தோனி “Anthony” இந்தத் திரைப்பட முன்னோட்டம் (ட்ரெய்லர் – ஒரு நிமிடம்) பார்த்து இரசியுங்கள். மண் மற்றும் கடலை மையமாகக் கொண்ட ஒரு நெய்தல் வாழ்வு உணர்ச்சி பூர்வமான கதை யாழ்ப்பாணத்தின் நீல வான வரம்புகளைத் தாண்டி, அலைகளின் இதயத் துடிப்புடன் வாழும் ஒரு குடும்பத்தின் பயணத்தை இந்த படம் வெளிப்படுத்துகிறது. இசைஞானி இளையராஜா ஈழத்தமிழ் திரைப்படத்திற்கு முதற்தடவையாக இசை அமைத்துள்ளார். நடிகர் நிழல்கள் […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – செல்லம்மா துரைச்சாமி

யாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா துரைச்சாமி அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார். தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு: வியாழன், 05 மார்ச் 2026 – (மாலை 5:00 மணி – இரவு 9:00 மணி) Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2026 – (மதியம் […]

செய்திகள்

கச்சதீவில் 6,000 இலங்கை பக்தர்கள்!

யாழ்ப்பாணம், பெப். 28 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4,439 பக்தர்களும், நெடுந்தீவிருந்து 450 பக்த்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434 பக்தர்களும் சென்றடைந்த நிலையில், அன்று இரவு குறிகாட்டுவான் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மேலும் 500 பக்தர்கள் சென்றடைந்தனர். நீர்கொழும்பு மற்றும் மன்னார் உட்பட ஏனைய மாவட்டங்களிலிருந்து நேரடியாகவும் பக்தர்கள் சென்றடைந்துள்ளனர். குறிகாட்டுவான் வந்தடைந்த 4,439 பக்தர்களும் கடற்படை மற்றும் தனியார் படகுகள் மூலம் கச்சதீவை சென்றடைந்தனர். இம்முறை 6,000க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் அங்கு […]

செய்திகள்

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள்!

  • February 26, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் வழியாக வருகை தருகின்றனர். இம்முறை தமிழகத்திலிருந்து மொத்தம் 3,996 யாத்திரிகர்கள் வருகை தரவுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 92 விசைப்படகுகளில் 3,589 பேரும், 26 நாட்டுப் படகுகளில் 307 பேரும் பயணிக்கவுள்ளனர். […]

செய்திகள்

இலங்கை நிலைமை குறித்து இன்று நோர்வே பாராளுமன்றில் விவாதம்!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே பாராளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாகவிவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான அம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார். தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து இங்கு […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – மங்களேஸ்வரி நவரெத்தினம்

  • February 25, 2026
  • 0 Comments

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா) 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னாரின் கிரியைகள் பற்றிய விபரம்: 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை கீழ்வரும் முகவரியில் ஈமக்கிரியை நடைபெறும்.The Memon Centre, 3 3Weir Rd, London SW12 0LT பின்னர் காலை 11 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்.Lambeth Crematorium, Blackshaw Road Tooting, London SW17 OBY இத்தகவலை உற்றார், […]

செய்திகள்

3 இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு தட்டுப்பாட்டுக்கு முடிவு கண்ட லிட்ரோ

  • February 23, 2026
  • 0 Comments

3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 3 இலட்சம் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டைவந்தடையவுள்ளன. எவ்வாறாயினும், […]