Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தமிழகத்திலிருந்து பெருமளவிலான பக்தர்கள் கடல் வழியாக வருகை தருகின்றனர்.

இம்முறை தமிழகத்திலிருந்து மொத்தம் 3,996 யாத்திரிகர்கள் வருகை தரவுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 92 விசைப்படகுகளில் 3,589 பேரும், 26 நாட்டுப் படகுகளில் 307 பேரும் பயணிக்கவுள்ளனர்.

தமிழகத்திலிருந்து புறப்படும் யாத்திரிகர்கள் நாளை காலை இராமேஸ்வரத்தில் முறையான சோதனைகளை முடித்துக்கொண்டு கச்சதீவு நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடாக, அவர்கள் பயணிக்கவுள்ள அனைத்துப் படகுகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்