Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

இலங்கை நிலைமை குறித்து இன்று நோர்வே பாராளுமன்றில் விவாதம்!

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே பாராளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக
விவாதிக்கப்படவுள்ளது.

நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான அம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார். தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து இங்கு கேள்வி எழுப்பப்படுமென கருதப்படுகிறது.

நல்லாட்சி, ஜனநாயக மறுசீரமைப்பு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம், இன மத சிறுபான்மை மக்களை பாதிக்கும் விடயங்கள், இராணுவ மயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து இந்த இடையீட்டு விவாதத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

சர்வதேச சமூகத்துக்கு எடுத்தியம்பும் பொருட்டும் ஜனநாயகப் பெருமானங்கள், மனித உரிமைகள், நீண்ட கால ஸ்திரத் தன்மை உட்பட பல விடயங்கள் இவ்விவாதத்தில் இடம்பெறுமென அம்சி குணரத்னம் தெரிவித்தார்.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்