Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

சமையல் குறிப்புகள்

ஆட்டிறைச்சி கறி இந்த மாதிரி செஞ்சு பாருங்க 

  • June 18, 2022
  • 0 Comments

வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சி கறி எப்பிடி தேங்காய் பால் விடாம ஒரு பிரட்டல் கறியா வைக்கிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ. Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 23 – T .சௌந்தர்

  • June 15, 2022
  • 0 Comments

இயலும் இசையும் அல்லது இசையும் இயலும்: கண்ணதாசன் காலம்  . கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான கருத்துக்களையெல்லாம் எளிமையாக எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் திரைப்பட நுழைவும் திராவிடக்கழக ஆதரவும் சமகாலத்தில் நிகழ்ந்தவை.அறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா ,கலைஞர் கருணாநிதி ,என்.எஸ்.கிருஷ்ணன் , எம்.ஜி.ஆர் என மிகப்பெரிய கலைஞர்கள் கூட்டமே தமிழ் திரையில் முகம் காட்டிய காலம். திராவிட இயக்கத்தின் செல்வாக்கு பின்னர் திராவிட முன்னேற்றக்கழகமாகி […]

அறிந்து கொள்வோம்

யாழ்ப்பாணத்துச் செல்வம் வெங்காயம்

  • June 14, 2022
  • 0 Comments

இக் காணெளியை பார்த்த போது என்னுள் பழைய ஞாபகங்கள் மீண்டும் புத்துணர்வாக ஓடியது.வெங்காய செய்கை மூலம் ‌யாழ்பாணத்தவர் அந்த காலத்தில் பெரும் பணம் ஈட்டியதும் நினைவில் வந்தது.பணப்பயிரான வெங்காய செய்கை பற்றிய இந்த காணெளி புலம் பெயர்ந்து வாழும் எமக்கு ஒரு புதிய உணர்வை தரும் என்ற நம்பிக்கையில் இங்கே காட்சிபடுத்துகிறேன்.

உடல் நலம்

குடல்வால் அழற்சிAppendicitis

  • June 13, 2022
  • 0 Comments

குடல்வால் அழற்சி என்றால் என்ன? குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு உடலில் அறியப்பட்ட செயற்பாடுகள் ஏதுமில்லை. குடல்வால் அழற்சிக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் குடல்வால் அழற்சி பின்வரும் அறிகுறிகளால் காண்பிக்கப்படும்: தொப்புழைச் சுற்றி அல்லது வயிற்றின் வலதுகைப்பக்க அடிப்பாகத்தில், வலி; அந்தப் பகுதியை இலேசாக அழுத்தும்போது, […]

படைப்பாக்கம்

கால் சலங்கை ஒலி

  • June 12, 2022
  • 0 Comments

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை அங்கேசந்தத்தை உருவாக்கும்விழியாவும் அவள் அசைவில்நிலையாக நின்று விடும்! அலைமோதும் ஒலிக்கு அவள்அசைந்தாடும் வேளையிலேசிலையாக நான் இருந்துஅவள் சதிர்கண்டு மகிழ்கிறேன்கொலுசாக மாட்டேனா?அந்த ஒலியாக மாட்டேனா?என்ற சிந்தையிலே ஆழ்கின்றேன்! கவிஞர் சுதேரா

கட்டுரைகள்

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று

  • June 11, 2022
  • 0 Comments

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று- 11.06.2021 மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான துரைராஜா அவர்கள் மக்களால் மதித்து வணங்கப்பட்ட பேராசிரியராக இந்த மண்ணிலே மிடுக்கோடு பவனி வந்தவர்…. அவரே பேராதனைப் பல்கலைக் கழகத்தின் “பொறியியல் பீடத்தில் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும், “துரைராஜா தேற்றத்தின்” (Thurai’s Theoy) சொந்தக்காரர்.அவரது வாழ்க்கையின் அடிச்சுவட்டில்…….• உடுப்பிட்டி,இமையாணன் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கிராமத்தில் 1934.11.10 ஆம் திகதி பிறந்தார்.• தனது ஆரம்பக் […]

அறிவித்தல்கள்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்மன் ஆலயம் > ‌வேட்டைத்தி௫விழா

  • June 11, 2022
  • 0 Comments

இன்று ஊரே விழாக்கோலம்பெற்றிருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு நாள்கொம்மந்தறை ஊர் வீதிகளில் ஊர் வலம் வரும் அம்மன் மக்களுக்கு தரிசனம் தந்து வேலை காடு சந்தி வரை வலம் வருவார் . அங்கு மக்கள் வான வேடிக்கை உடன் அம்மனை வரவேற்பார்கள் . ஊரே விழாக்கோலம்பெற்றிருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு நாளாக இன்று அமையும் இந்த விழா பற்றிய முழு விபரங்கள் கிடைத்தவுடன் இதே பக்கத்தில் அவை பிரசுரமாகும்.

ஊர் புதினம்

இலங்கையின் முதல் அரசினர் தமிழ் பாடசாலையும் பொன். கந்தையாவும்!

  • June 10, 2022
  • 0 Comments

கம்பர்மலை அரசினர் பாடசாலை அறுபதாவது அகவையையோட்டி முற்போக்கு சிந்தனையாளர் வ.அழகலிங்கம் அவர்கள் 18.07.2018 ல் எழுதிய கட்டுரை வரலாற்று பதிவுகளுக்காக இங்கே மீண்டும் பதிவு செய்யப்படுகிறது. கம்பர்மலை அரசினர்பாடசாலை நிறுவப்பட்டு அறுபதுவருடங்கள் ஆகின்றன. அது தப்பிப் பிழைக்க வேண்டிய சமுதாய அரசியற் சூழல் நிலைக்காவிட்டால் அதனால் ஒருபொழுதும் தப்பிப் பிழைத்திருக்க முடியாது. அது தோன்றும் காலத்திலும் தோன்றிய பின்னரும் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனந்தம். வரலாறு அதை இன்றுவரை அழியவிடாது பாதுகாத்து வருகிறது. எந்த ஒரு பிரச்சனையை விளங்க […]

கட்டுரைகள்

வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயம்> தோற்றமும் வளர்ச்சியும்

  • June 10, 2022
  • 0 Comments

இவ்வாலயம் தற்போது அமைந்திருக்கும் இடம் ஆரம்பத்தில் பூஞ்செடி கொடிகள் நிறைந்த ஒரு பூந்தோட்டமாக காணப்பட்டது. இப் பூந்தோட்டத்தின் அருகில் பெரிய அளவிலான 16 படிகளை கொண்ட திருக்குளம் ஒன்றும் இத் திருக்குளத்தின் அருகில் சிறிய மடம் ஒன்றும் இருந்தது. குளத்தின் கிழக்குப் புறமாக பெரிய அரசமரம் ஒன்றும் குளத்தின் தெற்குப் புறம் நடைபாதையாகவும் இருந்தது. குளத்தின் வடக்கு புறத்தில் இருந்த மடத்தில் ஆறுமுகக்குருக்கள் ஐயாவும் மனைவியும் வசித்து வந்தனர். குருக்கள் ஐயா அவர்கள் இப்பகுதி மக்களுக்குரிய சைவக்கிரியைகள் […]