Subscribe to our newsletter to get our newest articles instantly!
தோட்டப்பகுதியில் ஏதோ ஒரு விதத்தில் இந்திய விடுதலைத் தீயை பரப்பிவிட வேண்டும் என்று நாள்தோறும் அவன் உள்மனம் அவனுக்கு கட்டளையிட்டது. தோட்டத்துக் கூலி சனங்களில் அவன் மனசில் சில இளம் வாலிபர்கள் இடம் பிடித்தனர். அவர்கள் இருட்டு பட்டதும் அவனை அவனுடைய காம்பராவில் கண்டு கதைக்கத் தொடங்கினர்; அப்படி வந்தவர்களில் வீராசாமியும், வேலாயுதமும், ஐயன் பெருமாளும் கவனத்துக்குரியவர்கள். தங்களுடைய துரை ‘போப்பின் நடவடிக்கைகளில் அவர்கள் அதிருப்தியுற்றிருந்தனர். ஒன்றிரண்டு மனிதாபிமானமிகுந்த செயல்களால், தன்னுடைய மிருகத்தனமான உணர்ச்சிகளை மூடிமறைக்கப்பார்க்க முயற்சிக்கும் […]
மருத்துவ மாணவர் சுஜன் சுகுமாறன் தருகின்ற மருத்துவ விளக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
பெற்றதும் கொடுத்ததும். இதுவரை மெல்லிசைமன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில் இழைத்து கொடுத்தற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். ஹிந்திப்பாடல்கள் மட்டுமல்ல தென்னிந்திய திரைப்படங்களின் பாடல்களிலும் அவர்கள் இசை அனுபவங்களையும் பெற்றார்கள். மெல்லிசைமன்னர்களின் சமகால இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றின் சாயல்கள் இருப்பதைக் காண்கிறோம். ஆண்டு வரிசையில் அவை மெல்லிசைமன்னர்களுக்கு முன் வந்த பாடல்கள் என்பதை வைத்து நாம் இதைக் காண்கிறோம். பெற்றது. வாவேக […]
நம்மை அறியாமலே ஒரு நபரின் தனிப்பட்ட சுகாதாரத்தில் காது குழாய் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே காதுக்குழாய் அல்லது காது பகுதியை பற்றிய முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். ஆனால் நமது அன்றாட வாழ்க்கையில் காதுகளை பாதுக்காப்பதாக நினைத்து அதை மோசமாக்கி வருகிறோம் என உங்களுக்கு தெரியுமா? காதுகளுக்கு எதை செய்ய கூடாது என்பதையும் அதன் ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம் என்பதையும் இப்போது பார்ப்போம். காதுக்குழாய் என்றால் என்ன? மிகவும் எளிமையாக கூறவேண்டும் என்றால் காது குழாய் என்பது தோல் […]
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வடக்கு ஸ்ரீ மனோன்மணி அம்மன் | கொடியேற்றம்
தென்னிந்தியாவின் புகழ்பூத்த மதுரையம்பதியிலிருந்து இலங்கைக்கு தான் வந்த காலம் வேலாயுதத்தின் நினைவுக்கு வந்தது. தன் சித்தப்பா முறையான ஒருவருடன் தன் பதின்மூன்றாவது வயதில் கப்பல் மூலம் இந்த நாட்டுக்கு வந்து தோட்டத்தில் பேர் பதிந்து வேலை செய்யத் தொடங்கினான். தான் வந்த அதே கப்பலில் பிராமண குலத்தைச் சேர்ந்த அய்யர் ஒருவர்வந்தது அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. ஜெகஜோதியான நிறத்தில் மற்றவர்களிலிருந்து தனித்து நின்ற அவரின் தோற்றம் கப்பலில் தனியாக அவரை இனம் காட்டியது. புசல்லாவை நகரில் பொதுக் […]
நவம்பர் 27, 1940 அன்று சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுனில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில், டிராகன் ஆண்டில், காலை 6 முதல் 8 மணிக்குள் டிராகன் நேரத்தில் பிறந்தார் புரூஸ் ஜுன் ஃபேன் லீ. லீ ஹோய் சூன் மற்றும் அவரது மனைவி கிரேஸ் ஹோ ஆகியோருக்குப் பிறந்த நான்காவது குழந்தை புரூஸ். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள், ஃபோப் மற்றும் ஆக்னஸ், ஒரு மூத்த சகோதரர், பீட்டர் மற்றும் ஒரு இளைய சகோதரர், ராபர்ட். புரூஸின் பெற்றோர் அவருக்கு […]
படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்: படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன் நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை உள்வாங்கும் ஒருவன் அதில் லயித்து அதற்கு ரசிகனாகிறான். கலைஞன் படைப்பால் ரசிகன் புது அனுபவம் பெறுகிறான். உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் அந்தப்படைப்பின் மூலம் பரவசமும் அடைகின்றான் படைத்தலும்,அதனால் விளையும் பரவசமும் வெவ்வேறு நிலைகளில் இயங்குகிறது.”இன்பம் தரவும் ,பெறவும் பயன்படுத்தப் பெறுகிற சாக்கு இருக்கிறதே இது தான் கலை ” என்பார் […]