Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 9

  • September 10, 2022
  • 0 Comments

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி நகரில் நடந்த கூட்டம் அவனது நினைவுக்கு வந்தது. ஜயதிலக பார்க்கில் நாவலப்பிட்டி நகரம் அதுவரை காணக்கிடைக்காத ஜனத்திரள் குவிந்திருந்தது. பச்சை, வெள்ளை, சிவப்பு என்ற மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தன என்றாலும் சிவப்பு வண்ணக் கொடிகளே மைதானத்தில் நிறைந்திருந்தன. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கென்றே இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வந்திருக்கின்றனர். கம்யூனிஷ்ட் கட்சியின் பேச்சாளர் கமலாதேவி சட்டோபாத்யா கைலாகு கொடுத்து மேடையிலேறி அனைவரையும் பார்த்து கையசைக்கிறார். அவரது மலர்ந்த முகம் […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை-நிலம்-இசை

  • September 8, 2022
  • 0 Comments

இயற்கை – நிலம் – இசை : –  T.சௌந்தர் ஓர் அறிமுகம்.  எல்லாக்கலைகளுக்கும் உந்துசக்தியாக இருக்கும் இயற்கை, நிலம்  கலைகளில்  எங்ஙனம்  வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், முக்கியமாக அவற்றுடன் இசைக்கலைக்கும் இயற்கை – நிலம் போன்றவற்றிற்கும் உள்ள வினோதமான பிணைப்பு எந்தவகையில் உலகெங்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நான் அறிந்த வரையில்  ஓரளவு விளக்க முனையும் தொடர் கட்டுரை இதுவாகும்.  பலதரப்பட்ட இசைவகைகளைக்  கேட்ட அனுபவமும், அவை பற்றி அங்கங்கே என் கண்களுக்கு எட்டிய, படித்த , கேட்ட […]

அறிந்து கொள்வோம்

  திருமூலர் வரலாறு

  • August 31, 2022
  • 0 Comments

  திருமூலர்  இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் இவரே முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது திருவாவடுதுறையில் பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி […]

உடல் நலம்

மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி?நன்மைகள்

  • August 31, 2022
  • 0 Comments

பிராணாயாமம் என்பதன் பொருள் பிராணன்+அயாமம் அதாவது (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும். பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும் போது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. மனம் அமைதி பெறுகிறது. மன அழுத்தம் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தினசரி பிராணாயாமம் செய்பவர்களுக்கு நோய் வந்தால் அது தானாகவே எளிதாக குணமடைந்து விடும். பிராணாயாமம் பற்றி திருமூலர் அருளிச் செய்த ”திருமந்திரத்தில்” அட்டாங்க யோகம் […]

துயர்பகிர்வோம்

சந்திரபாலசிங்கம் பிரதாபன்

  • August 24, 2022
  • 0 Comments

அனந்தர் புளியங்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரபாலசிங்கம் பிரதாபன் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.இவர் சந்திரபாலசிங்கம் கிருஸ்னவேணி தம்பதிகளின் அன்பு மகனும்சபிதா அவர்களின் அன்பு சகோதரனும்தார்மசீலன் அவர்களின் அன்பு மைத்துனனும்ரிஸ்விகா,ரிஸ்மிகா,நற்பவி ஆகியோரின் அன்பு மாமனுமாவார்.தகவல் குடும்பத்தினர் அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள்ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகிறோம்.

உடல் நலம் கட்டுரைகள்

ஒற்றைத் தலைவலி என்றால் என்ன??

  • August 24, 2022
  • 0 Comments

ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான நரம்பியல் கோளாறு ஆகும், இது மிதமான முதல் கடுமையான தலைவலி மற்றும் குமட்டல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஒற்றைத் தலைவலிக்கு தற்போது சிகிச்சை இல்லை என்றாலும், நோயாளிகளுக்கு அவர்களின் ஒற்றைத் தலைவலியை நிர்வகிப்பதற்கும் இயல்பான வாழ்க்கையை அனுபவிக்கவும் உதவும் சிகிச்சைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளன.  மைக்ரேன் குழந்தை பருவத்திலிருந்தே தொடங்கலாம், ஆனால் பெரும்பாலும் 20 அல்லது 30 வயதில் நோயாளிகளில் தோன்றும். 40 வயதிற்குப் பிறகு இது ஒப்பீட்டளவில் அசாதாரணமானது, இருப்பினும் […]

துயர்பகிர்வோம்

அமரர் கெளரி பாலசுந்தரம்

  • August 24, 2022
  • 0 Comments

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெளரி பாலசுந்தரம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், அழகையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்லத்துரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், மேனன், தனுசாலினி ஆகியோரின்  பாசமிகு தாயாரும், லோகநாதன்(கனடா) , கலையழகன்(பிரான்ஸ்) , மகேஸ்வரி(இலங்கை) மதியழகன்(லண்டன்) , பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை […]

வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 8

  • August 22, 2022
  • 0 Comments

தொழிற்சங்கம் அமைக்கும் ஆர்வம் அவனிடம் துளிர் விட ஆரம்பித்தப் போது தன்னுடன் பழகும் ஆட்களிடம் அதை மெல்லப் பரப்பினாள். தன்னுடைய சக தொழிலாள தோழர்களின் துன்பம் கண்டு துடிக்காத ஒருவன், அவனது துயர்களைய முன் வராத ஒருவன் என்னதான் பிற முன்னேற்றங்களைக் கண்டாலும் பிரயோஜனமில்லை என்பது அவனது முடிவான தீர்மானமாக இருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு இந்தியாவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, ஒருவட்சத்துக்கு மேல் மக்கள் ஒரே இரவில் பலியான போது முழு உலகமே […]