Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோவில்

  • March 26, 2026
  • 0 Comments

அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: விநாயகப் பெருமான், கஜமுகாசுரனைக் கொன்ற போது, அசுரன் உடலினின்றும் பெருகிய ரத்தவெள்ளத்தால் இப்பகுதி முழுவதும் செந்நிறமானதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. தலசிறப்புகள்: மூலவர்: கணபதீசுவரர் சிவன், (உத்தராபதீசுவரர் பைரவர் உற்சவர்), ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்,தாயார்: சூளிகாம்பாள், திருக்குழலம்மை. தலவிருட்சம்: ஆத்தி. தீர்த்தமாக ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன, அவை சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்களாகும். […]

அறிந்து கொள்வோம்

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோவில்

  • March 24, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவிலும், திருநெல்லிக்காவலிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ள திருத்தங்கூரில்அமைந்துள்ளது. தலவரலாறு: ஒரு சமயம், உலகில் பிரளயம் ஏற்பட்டு பூவுலகம் முழுவதையும் கடல் நீர் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி, சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி, உலகம் முழுக்க கடல் […]

செய்திகள்

புதிய நியமனங்கள் வழங்கல் நிகழ்வு

  • March 23, 2026
  • 0 Comments

விசேட (காணி) மத்தியஸ்த சபை – புதிய நியமனங்கள் வழங்கல் நிகழ்வு வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தலைமை: திரு. செல்லத்துரை விமல்ராஜ்மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்வவுனியா & மன்னார் மாவட்டம் பிரதம அதிதி: திரு. P.A. சரச்சந்திரமாவட்ட அரசாங்க அதிபர்மாவட்ட செயலகம் – வவுனியா சிறப்பு அதிதி: திரு. நா. கமலதாசன்மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்மாவட்ட செயலகம் – வவுனியா தவிசாளர், உதவித் தவிசாளர் […]

அறிந்து கொள்வோம்

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோவில்

  • March 22, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ.,தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும்,உள்ள திருக்கொள்ளிக்காடு எனுமிடத்தில் அமைந்துள்ளது தலவரலாறு: சூரியனாரின் மனைவி உஷாவால் சூரியனாரின் உஷ்ண உக்கிரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பக்கத்தில் நெருங்கமுடியாமல் மருகினார். நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்துவைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்கமுடியவில்லை. இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து சிவனாரை நினைத்து தவம் புரிந்தார். சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த […]

அறிந்து கொள்வோம் செய்திகள்

இனவெறி ஒழிப்பு சர்வதேச நாள் ஏன் முக்கியம்

  • March 21, 2026
  • 0 Comments

⸻ ஷார்ப்வில், இனவெறி, மற்றும் நாம் வாழும் உலகம். 1960 மார்ச் 21ஆம் தேதி, தென்னாபிரிக்காவின் ஷார்ப்வில் என்ற நகர்ப்புற பகுதியில் ஆயிரக்கணக்கான கருப்பின மக்கள் ஒரு காவல் நிலையம் முன்பு கூடினர். அவர்கள் அப்பார்தெய்ட் ஆட்சியின் “பாஸ் சட்டங்கள்”க்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தச் சட்டங்கள் கருப்பின மக்களின் வாழும் இடம், பயணம், மற்றும் வேலை செய்யும் உரிமைகளை கட்டுப்படுத்தின. ஒருவர் பாஸ் புத்தகம் இல்லாமல் இருந்தால், அவர் கைது செய்யப்படலாம். இந்த போராட்டம் முழுமையாக […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சபாரத்தினம் பரராசசிங்கம்

  • March 19, 2026
  • 0 Comments

ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் பரராஜசிங்கம் (துரை சவுண்ட் உரிமையாளர்) அவர்கள் 19/03/2026 அன்று காலமானார். உடுப்பிட்டி வடக்கு, கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் தர்மகர்த்தா சபை தலைவராக கடமையாற்றியுள்ளார். அன்னாரின் இறுதி கிரியை நாளை (20/03/2026) காலை 9:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரிக்காடு மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! தகவல்: குடும்பத்தினர்

செய்திகள்

அடுத்தமாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்தாலும், இலங்கையில் அடுத்த மாத இறுதிவரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உண்டு. அளவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காகவே QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் குறித்த நிலைமையைத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த போதே இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – வல்லிபுரம் சூரியபிரகாசம்

  • March 16, 2026
  • 0 Comments

யாழ். புலோலி தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சூரியபிரகாசம் அவர்கள் 15-03-2026 அன்று காலமானார். இவர் ஆலடியார் பரம்பரையைச் சேர்ந்தவர். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரம்படும்.