Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் 2026.05.11 முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான யாழ்தேவி ரயில் சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறும். இந்த ரயில் குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளை கொண்டதாகும். ரயில்வே […]

செய்திகள்

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும்

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. அனர்த்தங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்டபுவியியலாளர் வசந்த சேனாதீர, டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் அப்படியே காணப்படுவதாகவும், மண்சரிவு காரணமாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதலாம் […]

அறிந்து கொள்வோம்

பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் நகரிலிருந்து 3km தொலைவில் நீடாமங்கலம் –மன்னார்குடி சாலையில் உள்ள பூவனூர் எனுமூரில் பாமினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தலவரலாறு: இந்த ஆலயம், 1000 – 2000 ஆண்டுகள் பழமையானது. வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கப்போட்டியில் இறைவன் வெற்றி கொண்டு மணந்ததால் இத்தல இறைவனாருக்கு சதுரங்க வல்லபேசுவரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் சிறந்தவன் என்று கூற, மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு […]

அறிந்து கொள்வோம்

பாமணி நாகநாதர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இருந்து வடக்கே சுமார் 2-3 கி.மீ தொலைவில், பாமணி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இக்கோவில், தற்போது நாட்டுக்கோட்டை செட்டியார்களால் பராமரிக்கப்படுகிறது. இத்தலத்து இறைவன் மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்ததால் இவருக்கு பாம்பை மேலே அணிந்து கொள்பவர் என்ற பொருள்பட பாம்பணி நாதர் என்ற பெயரும் உண்டு. அதனால் இந்தத் தலத்துக்கு பாம்பணி என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் பாமணி என்று மருவிற்று. ஆதிசேடன் நாகநாதரை பூசிக்க பாதாளத்திலிருந்து […]

அறிந்து கொள்வோம்

நன்னிலம் மதுவனேசுவரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 16-23 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழித்தடத்திலும், நன்னிலம் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. சுந்தரர் தேவாரம் திரு சற்குருநாத ஓதுவாரின் குரலில்… தலவரலாறு: விருத்திராசுரன் என்ற அசுரனின்  துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்டதால் மதுவனம் என்றும் பெயர் பெற்றது. ஈசனின் சிருஷ்டிகளில் அவனை வழிபட ஈ, எறும்பு, தேனீ, பாம்பு என்று எல்லா ஜீவன் களுக்கும் உரிமையுண்டு என்று காட்டும் தலங்களில் கோச்செங்கட்சோழனால் […]

அறிந்து கொள்வோம்

தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள திருத்தேவூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. தலவரலாறு: கோச்செங்கண்ணான் கட்டிய மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. குரு பகவான் இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை நெடுங்காலம் வழிபட்டு வந்தார். குருபகவானின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அவருக்குக் காட்சி தந்தார் அதைக் கண்டதும் இறைவனின் தாளில் விழுந்து வணங்கி வழிபட்டார் குரு பகவான். ஈசனும் மகிழ்வுடன் தேவர்களுக்குத் தலைவனாகவும், ஆசானகவும் இருக்கும் பதவியை அருளியதுடன், ‘தேவகுரு’ […]