Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள உறுதிமொழி

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் உறுதி வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை பாரியளவிலான இரண்டு பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்நோக்க நேரிட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அதிர்ச்சி நிலைமை

தித்வாக புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றம் போன்ற பொருளாதார அதிர்ச்சிகளினால் இாலங்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு பொருளாதார அதிர்ச்சி நிலைமைகளையும் இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு திட்டங்கள் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கைக்கு உதவும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார். 

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்