தைப்பொங்கல் நிகழ்வுகள்
கொம்மந்தறை மனோன்மணி அம்மன் கோவில் தைப்பொங்கல் பூசை வழிபாட்டுடன் காலை 6 மணியளவில் சூரிய உதயத்துடன் பொங்கல் பொங்கப்பட்டது. உடுப்பிட்டி வடக்கு நெற்கொழு வயிரவர் தேவஸ்தானம் 2026.01.15 அன்று கோவில் பூசைகளுடன் காலை 7.30 மணியளவில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்குப் படைக்கப்பட்டு, பின்னர் குருக்களினால் பொங்கல் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. கம்பர்மலை வேலுப்பிள்ளை நிலைவாலயம் ஒழுங்கு செய்த தைப்பொங்கல் நிகழ்வுகள் 2026.01.15 அன்று பொங்கல் பொங்கி ஆரம்பிக்கப்பட்டன. நினைவாலயத்தின் தலைவர் வேலுப்பிள்ளை கஜேந்திரன் மற்றும் முக்கிய உறுப்பினர்களான […]









