Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

​காதுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் நமைச்சல்?

  • July 24, 2022
  • 0 Comments

நம்மை அறியாமலே ஒரு நபரின் தனிப்பட்ட சுகாதாரத்தில் காது குழாய் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே காதுக்குழாய் அல்லது காது பகுதியை பற்றிய முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். ஆனால் நமது அன்றாட வாழ்க்கையில் காதுகளை பாதுக்காப்பதாக நினைத்து அதை மோசமாக்கி வருகிறோம் என உங்களுக்கு தெரியுமா? காதுகளுக்கு எதை செய்ய கூடாது என்பதையும் அதன் ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம் என்பதையும் இப்போது பார்ப்போம். காதுக்குழாய் என்றால் என்ன? மிகவும் எளிமையாக கூறவேண்டும் என்றால் காது குழாய் என்பது தோல் […]

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 5

  • July 23, 2022
  • 0 Comments

தென்னிந்தியாவின் புகழ்பூத்த மதுரையம்பதியிலிருந்து இலங்கைக்கு தான் வந்த காலம் வேலாயுதத்தின் நினைவுக்கு வந்தது. தன் சித்தப்பா முறையான ஒருவருடன் தன் பதின்மூன்றாவது வயதில் கப்பல் மூலம் இந்த நாட்டுக்கு வந்து தோட்டத்தில் பேர் பதிந்து வேலை செய்யத் தொடங்கினான். தான் வந்த அதே கப்பலில் பிராமண குலத்தைச் சேர்ந்த அய்யர் ஒருவர்வந்தது அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. ஜெகஜோதியான நிறத்தில் மற்றவர்களிலிருந்து தனித்து நின்ற அவரின் தோற்றம் கப்பலில் தனியாக அவரை இனம் காட்டியது. புசல்லாவை நகரில் பொதுக் […]

அறிந்து கொள்வோம்

புரூஸ் லீயின் நினைவு நாள் இன்று.(20.06.1973)

  • July 20, 2022
  • 0 Comments

நவம்பர் 27, 1940 அன்று சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுனில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில், டிராகன் ஆண்டில், காலை 6 முதல் 8 மணிக்குள் டிராகன் நேரத்தில் பிறந்தார் புரூஸ் ஜுன் ஃபேன் லீ. லீ ஹோய் சூன் மற்றும் அவரது மனைவி கிரேஸ் ஹோ ஆகியோருக்குப் பிறந்த நான்காவது குழந்தை புரூஸ். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள், ஃபோப் மற்றும் ஆக்னஸ், ஒரு மூத்த சகோதரர், பீட்டர் மற்றும் ஒரு இளைய சகோதரர், ராபர்ட். புரூஸின் பெற்றோர் அவருக்கு […]

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28 – T .சௌந்தர்

  • July 20, 2022
  • 0 Comments

படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்: படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன்  நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை உள்வாங்கும் ஒருவன் அதில் லயித்து அதற்கு ரசிகனாகிறான். கலைஞன் படைப்பால்  ரசிகன் புது அனுபவம் பெறுகிறான்.  உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் அந்தப்படைப்பின் மூலம் பரவசமும் அடைகின்றான் படைத்தலும்,அதனால் விளையும் பரவசமும் வெவ்வேறு நிலைகளில் இயங்குகிறது.”இன்பம் தரவும் ,பெறவும் பயன்படுத்தப் பெறுகிற சாக்கு இருக்கிறதே இது தான் கலை ” என்பார் […]

உடல் நலம்

வெயில் காலத்தில் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…

  • July 18, 2022
  • 0 Comments

புலம்பெயர் நாடுகளில் தற்போதைய வெப்பநிலை மிக அதிகமாக காணப்படுகிறது .இவ் உயர்வெப்பநிலை காரணமாக நமது உடலில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் .அது சம்பந்தமான விளக்கங்களை கீழே தந்துள்ளோம் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிப்பது கொஞ்சம் சிரமம் தான். அதிலும் இதய நோய்கள் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோடையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். ஆரோக்கியத்தில் வலுவாக உள்ள நபர்களால் இந்த கோடை வெயிலை எளிதில் சமாளிக்க […]

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 4

  • July 18, 2022
  • 0 Comments

கடந்த மூன்று தினங்களாக ‘துரைமுடக்கு’ எனப்பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது அந்த இடம். போப்துரை கொலை செய்யப்பட்ட அந்த இடம், தொழிற்சாலையி லிருந்து மூன்றாவது முடக்கு மறுமுனையில் பங்களாவிலிருந்து ஐந்தாவது முடக்கு தோட்டத்தில் அமைந்திருக்கும் பிரதான பாதையில் அந்த முடக்கை கொலை செய்வதற்கு தெரிந்தெடுத்தவர்கள் தோட்டப்பகுதியில் நன்றாக ஊறியவர்களாக இருக்க வேண்டும். அருகில் ஓடும் ஆற்றின் சலசலப்பு எந்த ஒலியும் வெளியே கேட்காதவாறு செய்துவிடும். மக்கள் நடமாடும் பகல் நேரத்திலேயே அந்த இடம் அமுங்கின இடமாக இருக்கும் போது இரவில் […]

துயர்பகிர்வோம்

இராஜேஸ்வரி சகாதேவன் 

  • July 14, 2022
  • 0 Comments

யாழ். வல்வெட்டி முடப்பனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, மலேசியா Muar, இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சகாதேவன் அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னையா, காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சகாதேவன்(Retired Telecom Engineering Planner) அவர்களின் அன்பு மனைவியும், சுந்தரலிங்கம், தியாகலிங்கம், இராஜபூபதி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற திலகேஸ்வரி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராஜதேவன்(தேவன்), […]