சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 7
எலியும் பூனையுமாக சண்டைப்பிடித்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி சாத்தனும், பெரிய கணக்குப்பிள்ளை மகாலிங்கமும் இப்போது நண்பர்களாகி விட்டனர். தங்களுக்குள் அடிக்கடி நேரும் சர்ச்சைகளை மறந்து, சின்னச்சின்ன தகராறுகளை விட்டுக்கொடுத்து, ஒன்றாக இருக்க பழகிவிட்டார்கள். துரை போப் கொலையுண்டதால் இந்த அதிசயம் நிகழ்ந்தது எல்லாம் வல்லவர் என்று தாம் நினைத்துக் கொண்டிருந்தவர்க்கே இந்த கதி என்றால் தம்முடைய நிலை என்னவாகும் என்பதில் ஏற்பட்ட அச்சம். தன்னுடைய தொழிலைப் பற்றிய அச்சம் சாத்தன் கங்காணிக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. நடேசய்யர் இலங்கை […]










