Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

சமையல் குறிப்புகள்

முட்டை புளிக்குழம்பு>Egg Omelet Kulambu <செய்வது எப்படி?

தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். முட்டையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.

இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் வீக்கமும் குறையும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது. 

எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது.

தேவையான பொருட்கள் :

முட்டை – 4

எண்ணெய் – தேவையான அளவு

வெங்காயம் – 2

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

புளி – எலுமிச்சை காய் அளவு

மஞ்சத்தூள் – அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

கொத்த மல்லித்தூள் – அரை ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

தேங்காய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்:

காய்ந்த மிளகாய் – 2

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/4டீஸ்பூன்

வெந்தயம் – 1/4டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய், சீரகம், மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். 

பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். பின்பு சோம்பையும், தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 

பின்பு முட்டை, உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய், சீரகம், மிளகு) பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்து கொள்ளவும்.

பின்பு ஆம்லெட்டை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள் ளவைகளை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தக்காளி குழைய வதக்கியதும் புளிச் சாரையுடன், மஞ்சத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது (தேங்காய் + சீரகம்) சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

இறக்கும் பொழுது வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும். சுவையான முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு ரெடி

You may also like

சமையல் குறிப்புகள்

அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி செய்வது

தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு – 1/2 கப்,உளுத்தம் பருப்பு – 1/4 கப்,துருவின தேங்காய் – 1/4 கப்,தனியா –
சமையல் குறிப்புகள்

வெந்தயக்குழம்பு செய்வோம் (Venthaya kulampu)

  • September 7, 2021
உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு வெந்தயக் குழம்பு (Venthaya kulampu) மிகச் சிறந்த மருந்தாகும்.வெந்தயகுழம்பு (Venthaya kulampu) உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு , வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கும்.வெந்தயத்தில்