Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம் உடல் நலம்

கொய்யா பழம்(Guava)>>மருத்துவ குணங்கள்

இன்றைக்கு நம் நாட்டுப் பழம்போல நாம் பாவிக்கத் தொடங்கிவிட்ட கொய்யாப் பழம் தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் வணிகம் செய்ய இந்தியா வந்தபோதுதான் அவர்களுடன் கொய்யாவும் வந்ததாகச் சொல்லப்படுகிறது. கொய்யா மரங்கள் இங்குள்ள தட்பவெட்ப நிலையைத் தாங்கும் தன்மை உள்ளவை. அதனால் கொய்யா மரங்கள் இங்கு அதிகம். கிராமங்களில் பலருடைய வீடுகளில் கொய்யாப் பழ மரம் இருக்கும்.

கொய்யாப் பழத்தின் வகைகள் பல. இலந்தப் பழ அளவிலும் கொய்யாப் பழங்களும் இருக்கின்றன. இவற்றைச் சீனக் கொய்யா என்கிறார்கள். நாம் கொய்யாப் பழத்தின் உட்புற நிறத்தை வைத்து சீனிக் கொய்யா, சர்க்கரைக் கொய்யா எனப் பிரித்துச் சொல்கிறோம். சில பகுதிகளில் இதை வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என்றும் அழைப்பதுண்டு.மேலும் கொய்யாப் பழத்தின் சிறப்பு என்னவென்றால் இது கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது.இதன் தாவரவியல் பெயர் பிசிடியம் கௌஜவா ஆங்கிலத்தில், கௌவா (Guava) என்று சொல்லப் படுகிறது. ஆங்கிலப் பெயரின் அடிப் படையிலேயே, தமிழில் கொய்யா என்று பெயர் வந்தது.வெப்ப நாடுகளின் முக்கிய கனி என்பதாலும், சத்துக்கள் அதிகம் கொண்டதாலும் இப்பெயர். கொய்யாவை, ஏழைகளின் பழம் (Poorman’s fruit) என்றும் சொல்வார்கள்.

சத்துப் பொருள்கள்:

நாம் உண்ணும் 100 கிராம் கொய்யாப் பழத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருள்கள்:

புரதம் 1 கிராம்,

கொழுப்பு 0.30 கிராம்,

நார்ப்பொருள் 5.40 கிராம்,

மாவுப்பொருள் 11.6 கிராம்,

கால்சியம் 10 மில்லிகிராம்,

பான் பிரஸ் 28 மி.கி.

இரும்புச் சத்து 104 ;மி

வைட்டமின் ‘‘சி’’ 232 மி.கி. என்ற அளவிலும்,

வைட்டமின் ஏ, வைட்டமின் பி சத்துக்களும், பெக்டினும் கணிசமாக உள்ளன.

வைட்டமின் ‘சி’ சுரங்கம்: கொய்யாப் பழத்தில், வைட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தை விட ஏழு மடங்கும், எலுமிச்சம் பழத்தை விட மூன்றரை மடங்கும் அதிகமாக உள்ளது. இதனால் கொய்யாப் பழத்தை வைட்டமின் சி சுரங்கம், என்று சொல்கிறார்கள்.

கொய்யாப் பழத்தை பொதுவாக கடித்துச் சாப்பிடுகிறோம் அல்லது துண்டுகளாக நறுக்கிச் சாப்பிடுகிறோம். கொய்யாப் பழத்தை நன்கு கழுவி, சுத்தம் செய்து, தோலுடன் கடித்துச் சாப்பிட்டால் தான் கொய்யாப் பழத்தின் முழுச் சத்துக்களும் நமது உடலுக்குக் கிடைக்கும்.

குறிப்பாக, வைட்டமின் ‘சி’ சத்து தோலில் தான் மிகுதியாக உள்ளது. சதைப் பகுதியின் உள்ளே போகப் போக வைட்டமின் ‘சி’ சத்தின் அளவு குறைகிறது என உணவியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

கொய்யாப் பழத்தை பக்குவம் செய்து, கூழ், ஜெல்லி, சிரப், பேஸ்ட், பாலேடு, கொய்யா முரப்பா, ஜாம், முதலியன தயாரித்து பல வழிகளில் உண்ணலாம். 

கொய்யாப் பழம் பல மருத்துவக் குணங்கள் கொண்டது. சளித்தொல்லை வராது காக்கும் அற்புத குணம் கொய்யாப் பழத்திற்கு முக்கியமாக உண்டு. 

குடல் கோளாறுகளை நீக்கும். இரத்த விருத்தி ஏற்படுத்தும், இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும். தூக்கத்தைத் தூண்டும். சிறந்த சிறுநீர் பெருக்கி. ஈறு, பற்களைப் பலப்படுத்தும்.நரம்புகளை வலுப்படுத்தும். உடலுக்குக் குளிர்ச்சி ஊட்டும். மலமிளக்கி. தோல் நோய்களுக்கு மாமருந்து. விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

மருத்துவப் பயன்கள்:

கொய்யாப் பழத்தில், அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால் இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சளிப் பிடிக்காது காக்கும் தன்மை உள்ளது. 

சிறுகுடல், பெருங்குடல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்கள், கொய்யாப் பழத்தைத் தின்று வர, நன்கு குணம் கிடைக்கும். 

 கொய்யாப் பழத்திலுள்ள பெக்டின் சத்தும், வைட்டமின் ‘சி’ சத்தும்தான் இந்தக் குணத்திற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அனீமியா என்னும் இரத்த சோகை உள்ளவர்கள், கொய்யாப் பழத்தைக் கூழ் செய்து குடித்து வர, இரத்தவிருத்தி ஏற்படும். சோகை நோய் நீங்கி, நலன் பயக்கும். 

இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும் தன்மையும் கொய்யாப் பழத்திற்கு உண்டு.

தூக்க மில்லாமல் அவதிப் படுபவர்கள், தினமும் படுக்கைக்குச் செல்லுவதற்கு முன், ஒரு தம்ளர் கொய்யாப் பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து பருகினால் நன்கு தூக்கம் வரும்.

கொய்யாப் பழத்தை கடித்துத் தின்று, ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் குடித்தால், சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீர் தாரையிலுள்ள எரிச்சல் நீங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கொய்யா ஒரு இயற்கை நல் மருந்து.

விந்து உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொய்யாப் பழத்திற்கு உண்டு. செலவு மிகக் குறைவான சிக்கன மருத்துவம் இது. 

கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தனிக்க, கொய்யா பழக்கூழ் பருகினால் போதும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கொய்யாப் பழம் நல்ல பழம். 

பெரிய வர்களுக்கு எலும்பை வலுப்படுத்தும். கொய்யாப் பழத்துடன், ஒரு செவ்வாழைப் பழம் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்குபடும்.

கொய்யா பழத்தின் சதைப் பாகத்தை நன்கு பிசைந்து, காய்ச்சிய பசும் பாலில் கலந்து கொடுத்துவர, குழந்தைகள் நன்கு ஆரோக்கி யமாகத் திகழ்வர். நன்கு சுறு சுறுப்பு தானே வரும்.

கொய்யாப்பழம், ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஈறு மற்றும் பற்களைப் வலுப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழச்சாறுடன் திராட்சைப் பழச்சாறு கலந்து பருகி வர, நரம்புகள் பலப்படும். 

பக்க விளை வில்லா இயற்கை மருந்து இது. கொய்யாப் பழக்கூழ் குடித்துவர, சொறி, சிரங்கு குணமாகும். சரும நோய் வராது பாதுகாக்கும். மேனியை பளபளப்பாக வைக்கும் தன்மை கொய்யாப் பழத்திற்கு உண்டு.

கொய்யாப் பழக்கூழுடன், எலும்மிச்சம் பழச்சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து பருகினால், பித்தம் விலகி நலன் பயக்கும். காக்கா வலிப்பு உள்ளவர்கள், கொய்யாப் பழக் கூழ் சாப்பிட்டு வர, நோயின் தன்மை கட்டுக்குள் இருக்கும். 

பசி, ருசி இல்லாதவர்கள், கொய்யாப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடித்தால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்கு பசி ருசி உண்டாகும்.

You may also like

அறிந்து கொள்வோம்

Goggles & Shades for Girls

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut
அறிந்து கொள்வோம்

Best Natural and Organic Makeup

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut