Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

கச்சதீவில் 6,000 இலங்கை பக்தர்கள்!

யாழ்ப்பாணம், பெப். 28 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4,439 பக்தர்களும், நெடுந்தீவிருந்து 450 பக்த்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434 பக்தர்களும் சென்றடைந்த நிலையில், அன்று இரவு குறிகாட்டுவான் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மேலும் 500 பக்தர்கள் சென்றடைந்தனர்.

நீர்கொழும்பு மற்றும் மன்னார் உட்பட ஏனைய மாவட்டங்களிலிருந்து நேரடியாகவும் பக்தர்கள் சென்றடைந்துள்ளனர். குறிகாட்டுவான் வந்தடைந்த 4,439 பக்தர்களும் கடற்படை மற்றும் தனியார் படகுகள் மூலம் கச்சதீவை சென்றடைந்தனர்.

இம்முறை 6,000க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் அங்கு சென்றதுடன் இந்தியாவிலிருந்து 3,992 பக்த்தர்கள் சென்றடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு எதிர்பார்த்த பக்தர் எண்ணிக்கையை விடவும் அதிகரித்த அளவு பக்தர்கள் வருகை தந்தமையால் பயணத்தில் கடும் நெருக்கடி எதிர்கொள்ளப்படுகின்றது.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்