Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும்

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. அனர்த்தங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட
புவியியலாளர் வசந்த சேனாதீர, டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் அப்படியே காணப்படுவதாகவும், மண்சரிவு காரணமாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதலாம் கட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகள் என்பன அடையாளம் காணப்பட்டன. இதேவேளை நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மண்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஏதேனும் அவசர தேவைகள் இருப்பின் அனர்த்த மேலாண்மைப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்