பொங்கிவரும் நம்நாள் தாய்த்தமிழின் பொங்கலன்றோ—-2024
சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,இசைத்தமிழின் மென்சுவையோ; தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ; யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ; மானிடன் கண்டுகொண்ட இன்பத்தின் ஊற்றே, தாய்த்தமிழின் முதல் நாளும், இறக்கை விரித்துப்பறந்துவரும் செந்தமிழின் திருநாளும், தைத்திருநாளே தைப்பொங்கலென தமிழன் சித்தரிக்கும் நன்நாளன்றோ; மான்களும் முயல்களும் துள்ளிவிளையாட, எலிகளும் அணில்களும் ஓடிவிளையாட, சிறுவர் சிறுமியர் கூடிவிளையாட; ஆதவன் கதிர் கொடுக்க, கோவில்மணி இசைஎழுப்ப, மூதாட்டி பார்வையிலே, மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலமிட்டு; உலகமே திலகமென […]




