மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 09 ] T .சௌந்தர் 
இனிய இசையும் இனிய குரலும் இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை வழங்கப்படுவது பொதுப்பண்பாகவும் இருக்கிறது. மனிதக் குரல்களின் மகத்துவம் என்பதை பாடகர்களின் குரல்களிலும் நாம் தரிசிக்கின்றோம். இனிய இசையுடன் இணைந்து வரும் குரல்கள் அதிகம் கவனம் பெறுவதுடன் ரசிக்கவும் ,போற்றவும் படுகின்றன. இனிமையான குரல்களின் வசீகரம் பாடல்களை புதியதளத்திற்கு உயர்த்தி செல்கிறது.அதனால்தான் மனிதக்குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஒரு பாடலில் குரலும் ஒரு பகுதிதான் என்ற போதிலும் […]













