Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அக்கினிக்குஞ்சுகள் கட்டுரைகள்

மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-   மு. நித்தியானந்தன்-பாகம் 6

  • May 13, 2022
  • 0 Comments

கடல்கடந்த நாடுகளில் கூலிகளாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள் தங்கள்மீது துரைத்தனம் நடத்திய அடக்குமுறைதர்பாருக்கு எதிராகக் கிளர்ந்தபோது, அதற்கு தங்கள் உயிரைப் பணயம்வைக்க நேர்ந்தது. இலங்கையில் தேயிலைத்தோட்டத்தில் கிளர்ந்த அந்த எழுச்சிப் போராட்டத்தில், 1942இல் வீராசாமியும் வேலாயுதமும் தூக்குக்கயிறை முத்தமிடவேண்டி வந்ததென்றால், அதற்கு அடுத்து  ஐந்து ஆண்டுகள் கழித்து, மலேயாவில் ரப்பர் தோட்டங்களில், ஈயச்சுரங்கங்களில் அடக்குமுறையை எதிர்த்து, தொழிற்சங்கப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய எஸ்.ஏ.கணபதி 1949இல் மலேயாவின் புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டமை உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தியது.  தன் […]

உடல் நலம்

ஆஸ்துமாவை புரிந்து கொள்ளலாம் வாங்க

ஆஸ்துமா என்ற பெயரை பெரும்பாலும் அனைவரும் அறிவர்! ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்! இந்த ஆஸ்துமா நோய் , உனக்கு தான் வரும் , எனக்கு தான் வரும் என்றெல்லாம் கிடையாது.. யாருக்கு வேண்டுமானாலும் , எந்த வயதிலும் , எந்த கால நிலையிலும் வரக்கூடும்!இதை முழுமையாக குணப்படுத்துவதற்கு என்று மருந்து ஒன்றும் கிடையாது! ஆனால், இந்த நோயை , சில மருந்துகள் மூலம் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 18- T .சௌந்தர்

  • May 10, 2022
  • 0 Comments

இசையமைப்பும்இராகங்களும்: தமிழ்ராகங்கள். ஒரு பாடலுக்கான இசையமைப்பு என்பது படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் சம்பந்தப்பட்ட ஓர் நிகழ்வாகும். படத்தின் சூழ்நிலையை ஒட்டி இசை அமைக்கப்படுவதால் இவர்கள் அனைவரதும் சங்கமம் நிகழ்கிறது. தமிழ் சினிமாவில்  அவரவர் பெற்றிருக்கும் அந்தஸ்த்துக்குத் தக்கவாறு அங்கு தலையீடுகள் வெளிப்படும். கலைஞர்கள் நாடுவது முழுமையான சுதந்திரம்.அது எல்லா நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் பணபலம் கொண்ட தயாரிப்பாளர்களும் , புகழ்பலம் கொண்ட நடிகர்களும் தங்கள் தகுதியை மீறி […]

கட்டுரைகள்

வரலாற்றில் பிராமண நீக்கம்:நூல் அறிமுகம்

  • May 9, 2022
  • 0 Comments

நூல் அறிமுகம்: “வரலாற்றில் பிராமண நீக்கம்” எனும் இந்த நூல் பேசும் செய்திகள் நமக்கு பல்வேறு சாளரங்களைத் திறந்து விடுகின்றது. இது வரை அறியப்படாத, ஆராயப்படாத பார்ப்பனியத்தின் இருண்ட பிரதேசங்களை அம்பலப்படுத்துகின்றது. இந்த நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் அதன் பேசுபொருளாலும், கருத்தாழத்தாலும் நம்மை விலகிப் போகச் செய்யாமல் கடைசிவரை கட்டிப் போட்டு விடுகின்றது. வேதங்கள் தொடங்கி சமணம், பெளத்தம், பக்தி இயக்கம், தேசிய இயக்கம் என பல்வேறு காலகட்டங்களில் பார்ப்பனியம் எவ்வாறு இந்திய சமூகத்தில் தொழில்பட்டது […]

உடல் நலம்

கணினி கண் சோர்வு -Computer eye strain

  • May 8, 2022
  • 0 Comments

டிஜிட்டல் கண் திரிபு அறிகுறிகளில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவது இந்த நாட்களில் அனைவரும் கணினித் திரை, தொலைபேசி அல்லது பிற டிஜிட்டல் சாதனத்தை உற்றுப் பார்ப்பது போல் தெரிகிறது. இது டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் எனப்படும் பரவலான பிரச்சனையை ஏற்படுத்துகிறது . டிஜிட்டல் கண் அழுத்தத்தின் அறிகுறிகள் பின்வருமாறு: கண் சோர்வு மற்றும் அசௌகரியம் வறண்ட கண்கள் தலைவலி மங்கலான பார்வை சிவந்த கண்கள் கண் கலங்குகிறது கழுத்து மற்றும் தோள்பட்டை வலி கணினிகள் மற்றும் […]

தாயகத்து படைப்புகள்

அவசர உலகத்தில் புலம் பெயர்ந்த மண்ணில்

  • May 8, 2022
  • 0 Comments

இன்றய அவசர உலகத்தில் புலம் பெயர்ந்த மண்ணில்தன்னம் தனியே தன் தேவையை விட தன் சார்ந்த உறவினர்களின் தேவைக்காகவும் ஓடி ஓடி உழைக்கின்ற ஓர் இழைஞனின் உள்ளக்குமுறல்,வேதனை குமுறல்,துயர குமுறல்,சோக குமுறல் என எந்த வார்த்தைகளில் சொன்னாலும் அதை விபரிக்கின்ற வார்த்தை என்னிடம் இல்லை.இப்பாடலை கேட்ட போது என்னுள் ஏற்பட்ட கலக்கம் இங்கே பதிவேற்றம் செய்ய முயற்சித்தது.

அக்கினிக்குஞ்சுகள் கட்டுரைகள்

மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-   மு. நித்தியானந்தன்-பாகம் 5

  • May 6, 2022
  • 0 Comments

கம்பளை நீதிமன்றில் போப்துரை கொலைவழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கொழும்பிலிருந்து வெளியான Times of Ceylon (May 10, 1941) பத்திரிகை The Murder of Mr. Pope என்று தலைப்பிட்டு  ஆசிரியத்தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்தின் ஆரம்பம் பின்வருமாறு அமைந்திருக்கிறது: ‘அசாதாரணமான காட்டுமிராண்டிச் சூழ்நிலைமைகளில் நடைபெற்றிருக்கும் திரு. சி.ஏ.ஜி.போப்மீதான கோழைத்தனமான படுகொலையானது, மலைநாட்டில் சிலகாலமாக எழுச்சிபெற்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர் கிளர்ச்சியில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிருப்திகொண்டிருக்கும் சக்திகள் இந்தப் படுகொலையுடன் சம்பந்தம்  கொண்டிருக்கின்றன என்பதில் எந்தச் […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 17 ] T .சௌந்தர்

  • May 3, 2022
  • 0 Comments

இசையாற்றலும்புதியகுரல்களும்: திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களும் , இசையமைப்பில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் பலர் தாங்களும் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததையும் நாம் அறிவோம். அந்தவகையில் இந்திய திரைவானில் முதல் இரட்டையர்களாக உருவாகிப் புகழபெற்றவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இணை! இந்த இரட்டையர்கள் இசைக்கலைஞர்களாக இருந்து இசையமைப்பாளர்களானவர்கள். நவுசாத்,சி.ராமச்சந்திரா,எஸ்.டி.பர்மன் போன்ற புகழ்மிக்க இசையமைப்பாளர்கள் கோலோச்சிய 1950களிலேயே மிக இளைஞர்காளாக இருந்த போதே மிகப்பெரிய வெற்றிப்பாடல்களைக் கொடுத்தவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்கள். தமிழில் “அவன்” என்ற என்ற பெயரில்  மொழிமாற்றம் […]

அறிந்து கொள்வோம்

உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மே தின வரலாறு

  • May 1, 2022
  • 0 Comments

இன்று மே 1. சர்வதேச தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான […]