கீழடி அகழாய்வில் வெளிவந்த சுடுமண் உறைகிணறு நுட்பமான வடிவமைப்பை கண்டு மக்கள் ஆச்சரியம்
கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறை கிணறு வெளிவந்துள்ளது. அதில் உள்ள நுட்பமான வடிவமைப்பை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மண்ணுக்குள் புதைந்திருந்த பாசிமணிகள், சிறிய, பெரிய பானைகள், பெண்கள் காதில் அணியும் […]











