Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

ஊர் புதினம் நிகழ்வுகள்

தைப்பொங்கல் நிகழ்வுகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்மன் கோவில் தைப்பொங்கல் பூசை வழிபாட்டுடன் காலை 6 மணியளவில் சூரிய உதயத்துடன் பொங்கல் பொங்கப்பட்டது.


உடுப்பிட்டி வடக்கு நெற்கொழு வயிரவர் தேவஸ்தானம் 2026.01.15 அன்று கோவில் பூசைகளுடன் காலை 7.30 மணியளவில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்குப் படைக்கப்பட்டு, பின்னர் குருக்களினால் பொங்கல் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.


கம்பர்மலை வேலுப்பிள்ளை நிலைவாலயம் ஒழுங்கு செய்த தைப்பொங்கல் நிகழ்வுகள் 2026.01.15 அன்று பொங்கல் பொங்கி ஆரம்பிக்கப்பட்டன.

நினைவாலயத்தின் தலைவர் வேலுப்பிள்ளை கஜேந்திரன் மற்றும் முக்கிய உறுப்பினர்களான வேலுப்பிள்ளை பாஸ்கரன், நடராஜா ஆனந்தராஜா அவர்களின் வரவேற்புரை, ஆசிச்செய்தி மற்றும் நினைவாலயத்தின் பணி தொடர்பான விளக்கவுரை ஆகியவை ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து நினைவாலயத்தில் பயிலும் மாணவ மாணவிகளின் பேச்சு, பாடல், நடனம், கரகாட்டம் என்பன நிகழ்ந்தன. தொடர்ந்து ஆசிரியைகளுக்கும் மாணவ மாணவிகளுக்கும் நினைவாலயத்தால் தைப்பொங்கலை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


கொம்மந்தறை சனசமூக நிலையம் 2026.01.15 அன்று உறுப்பினர்களின் பங்களிப்புடன் பொங்கல் பொங்கி தைப்பொங்கலை இனிதே நடாத்தினர். நிகழ்வில் தலைவர், செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்