Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

3 இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு தட்டுப்பாட்டுக்கு முடிவு கண்ட லிட்ரோ

3 இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு தட்டுப்பாட்டுக்கு முடிவு கண்ட லிட்ரோ

3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல்
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 3 இலட்சம் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை
வந்தடையவுள்ளன. எவ்வாறாயினும், நேற்று நாட்டின் பல பகுதிகளில் எரிவாயுத் தட்டுப்பாடு நிலவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், சில இடங்களில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் போதுமான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு
கப்பல்கள் வரவுள்ளன எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்