Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

உலகை ஆட்டம் காண வைத்த எரிபொருள்கள் விலையேற்றம்

85 நாடுகள் பெரும் பாதிப்பு

கொழும்பு, மார்ச் 12 மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலகளவில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளன.

போர் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் குறைந்தது 85 நாடுகள் பெற்றோல் விலை உயர்வைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச எரிபொருள் விலை விவரங்களின்படி ஆசிய நாடுகள் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிக அதிகப்படியான உயர்வாக 50 வீத விலை உயர்வைப் பதிவு செய்துள்ளது.

இங்கு ஒரு லீற்றர் பெற்றோல் 0.75 டொலரிலிருந்து 1.13 டொலராக உயர்ந்துள்ளது. அத்துடன் லாஓஸில் 33 சதவீதமும், கம்போடியாவில் 19 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 17 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவில் 18 சதவீத விலை உயர்வைப் பதிவு செய்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை போர் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகவே பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் பயணிக்கின்றன. இதனால் எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன.

நிலைமையைக் கட்டுப்படுத்த இந்த நாட்டு அரசாங்கங்கள் ஏற்கனவே அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்