Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு நடைமுறை வெளியீடு

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் பாரிய மருத்துவ சிக்கல்களைத் தடுக்கும் நோக்கில், சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவினால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், தலையணைச் சமர், முட்டி உடைத்தல், கிராமிய ஓட்டப்பந்தயங்கள், சைக்கிள் ஓட்டம், நீச்சல், படகோட்டம், கரண்டியால் எலுமிச்சை கொண்டு செல்லுதல் மற்றும் சாக்கு ஓட்டம் போன்ற அதிக போட்டித்தன்மை கொண்ட விளையாட்டுகளின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுக்கள் உற்சாகமானவை என்றாலும், அவற்றின் போட்டித்தன்மை காரணமாக வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குக் காயம் அல்லது தீவிர உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, கொண்டாட்டங்களின் போது அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்