Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழா

திருகோணமலை தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமையம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழாவும் பெருமானுடைய நகர்வலமும் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (15) மகாசிவராத்திரி பெருவிழா சமய அனுட்டானங்கள் அபிசேஷக ஆராதனைகள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமாகும்.
மகாசிவராத்திரி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நான்கு ஜாம அபிஷேகங்களும் பூசைகளும் நடைபெறும்.

  • முதலாம் ஜாமம்: மாலை 4:30 மணி (தொடர்ந்து பூசை)
  • இரண்டாம் ஜாமம்: இரவு 8:30 மணி (தொடர்ந்து பூசை)
  • மூன்றாம் ஜாமம்: (லிங்கோற்பவர் காலம்): இரவு 10:00 மணிக்கு ஆரம்பித்து, நள்ளிரவு 12:00 மணிக்கு பூசை.
  • நான்காம் ஜாமம்: அதிகாலை 3:00 மணி (தொடர்ந்து விசேட பூசை).

பெருமாள் மாதுமை அம்பாள் சமேதராக திருகோணமலை நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வருவார்:

முதல் நாள் (16.02.2026 – திங்கள்): மாலை 4:30-க்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, உப்புவெளி, புளியங்குளம் வழியாகச் சென்று பாலையூற்று பாலமுருகன் ஆலயத்தை சென்றடைவார்.

மூன்றாம் நாள் (18.02.2026 – புதன்): மாலை 5:00-க்கு துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, சிவபுரி வழியாக விசுவநாதசுவாமி (சிவன்) ஆலயத்தை சென்றடைவார்.

நான்காம் நாள் (19.02.2026 – வியாழன்): மாலை 5:30-க்கு விசுவநாதசுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்டு, தில்லைநகர், திருநாவுக்கரசு வீதி வழியாக பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை சென்றடைவார்.

ஐந்தாம் நாள் (20.02.2026 – வெள்ளி): மாலை 5:30-க்கு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை சென்றடைவார்.

அலங்காரங்கள் வீதிகளுக்கு குறுக்காக கட்டப்படும் தோரணங்கள் 20 அடிக்கு மேல் உயரமாக இருக்க வேண்டும் என ஆலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்