Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

வவுனியாவில் டித்வா புயலினால் சேதமுற்ற வீடுகளுக்கு காசோலை

வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றிருந்தது.

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும்
தலா ரூபா 5 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் 669 பேருக்கு இந்த காசோலை வழங்கப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 476 பேரில் முதற் கட்டமாக 131 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத் சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You may also like

ஊர் புதினம் செய்திகள்

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணைத்
ஊர் புதினம் செய்திகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை தொடர்ந்து திருவிழா பத்து நாட்கள்