மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்
இலங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ‘எதிர்காலத்திற்கு அடிவைப்போம்’ எனும் தொனிப்பொருளில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட ‘தாழ்தள” பஸ் சேவை நேற்று மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக் கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் இதன் போது […]




