முல்லைத்தீவில் வெற்றிகரமாக மஞ்சள் செய்கை வயல் விழா
வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் 2025ஆம் ஆண்டிற்கான மஞ்சள் செய்கை திட்டம் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு விவசாயப் போதனாசிரியர் பிரிவின் தொட்டியடி கிராமத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குணரத்தினம் எனும் முன்னோடி விவசாயிக்கு வழங்கப்பட்ட இத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் செய்கை சிறப்பாக விளைச்சல் அளித்ததை முன்னிட்டு, ‘உலர் வலயத்தில் வெற்றிகரமான மஞ்சள் செய்கை’ என்ற தலைப்பில் மஞ்சள் அறுவடை விழா 07.04.2026 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வு விசுவமடு விவசாயப் போதனாசிரியர் […]




