திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில், திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையிலுள்ள தலையாலங்காடு எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் வேள்வி செய்து ஏவி விட்ட முயலகன் என்னும் கொடிய அரக்கனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடி அவன் முதுகை நெரித்த நிகழ்வு நடந்தது இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை. எனவே, நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடராஜர் சிலையில் ஐயனின் திருப்பாதங்களில் கீழ் முயலகன் இருப்பதை காணலாம். தலசிறப்புகள்: மூலவர்: […]




