மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 13 – T .சௌந்தர்
தொகையறாவும் சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும் ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள் இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாய் அமைந்தது. அந்தக்காலங்களில் கதைப்போக்கின் சில முக்கிய அம்சங்களை சின்ன ,சின்ன பாடல்கள் மூலம் விளக்கும் யுத்தியை கைக்கொண்டனர். அதற்கு விருத்தம் ,தொகையறா போன்றவை சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டன ஜி.ராமநாதன் இசையமைத்த அம்பிகாபதி போன்ற படங்களில் இவற்றை […]













