Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உலக ஒலிம்பிக் தினம்

  • June 23, 2021
  • 0 Comments

கடந்த காலங்களில், உலகப் போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. கிரேக்க நகரமான ஒலிம்பியாவில், கி.மு. 776-ம் ஆண்டு முதல் கி.மு. 393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடைசெய்யப்பட்டது. இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி நவீன வடிவம் பெற்று, […]

கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்

  • June 16, 2021
  • 0 Comments

கொரோனா தடுப்பூசி குறித்து நேயர்கள் பிபிசியின் சமூக வலைதள பக்கங்களில் கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் வேலூர் சிஎம்சியின் கிளினிக்கல் வைராலஜி துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் டி. ஜேகப் ஜான். 1. தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் உடனடியாக பாதிப்பு வரவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புண்டா? பதில்: இல்லை. தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை மூன்று விதமாக எதிர்வினையாற்றும். அவை ஒவ்வாமை, உடலுக்கு கேடு […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

அமரர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார்

  • June 14, 2021
  • 0 Comments

அமரர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் 13.௦6.2021 அன்று காலமானார். இவர் யா/உடுப்பிட்டி எ.மி.கல்லூரியின் பழைய மாணவரும் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் ஆவார். ஊரும் உறவும் உறுப்பினர்கள் அவர்தம் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கிறார்கள்

வரலாற்று காணொளிகள்

கியுவான்சோ (Quanzhou)நகரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துக் கல்வெட்டு

  • June 14, 2021
  • 0 Comments

கியுவான்சோ (Quanzhou)நகரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துக் கல்வெட்டின் சிறப்பு முக்கியத்துவம் என்ன? கியுவான்சோ மற்று தமிழகம் இடையே தொடர்பு என்ன?கேள்விகளுடன் இந்த ஆவணப் படத்தைக் கண்டு, தமிழ் கல்வெட்டுக்களின் ரகசியங்களை அறிந்து கொள்வோம். இது www.tamil.cri.cn என்ற சீனாவின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட கானொளி.

வாழ்த்துக்கள்

நிலானியின் பிறந்தநாள்

  • June 12, 2021
  • 0 Comments

இன்று  செல்வேஸ்வரன்  நிலானியின் பிறந்தநாளில் அவரை அப்பா அம்மா ,தாத்தா செல்வ சந்திரன் ,சித்தப்பா ஸ்ரீதர் குடும்பத்தினர், சித்தப்பா ஆனந்தன் குடும்பத்தினர் ,மாமி சத்ய தேவி குடும்பத்தினர், மாமி சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்க வளமுடன்  என்று வாழ்த்துகிறார்கள்

அறிந்து கொள்வோம்

நாசா சொல்லும் சூப்பர் தகவல்: பூமிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட TOI-1231 b சிறுகோளில் நீர் ஆதாரமா?

  • June 11, 2021
  • 0 Comments

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தற்பொழுது பூமிக்கு மிக அருகில் ஒரு புதிய சிறுகோளைக் கண்டுபிடித்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய சிறுகோள் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது என்று அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிறுகோளில் நீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சிறுகோள் பற்றிய கூடுதல் சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். தற்பொழுது நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள சிறுகோள், பூமிக் கோளில் இருந்து சுமார் […]

சூரியனே இல்லா நகரம்: தொடர்ந்து 60 நாட்களுக்கு 24 மணிநேரமும் இரவு மட்டுமே- எங்கு தெரியுமா?

  • June 9, 2021
  • 0 Comments

நவம்பர் 19 ஆம் தேதி அஸ்தமனமாகும் சூரியன் ஜனவரி 22 வரை அதாவது 60 நாட்களுக்கு பூமியின் ஒரு நகரில் உதிக்காது என்றால் நம்ப முடிகிறதா. இதோ முழு விவரங்களையும் பார்க்கலாம். 60 நாட்கள் சூரியன் உதிக்காது நீ மறைய நான் வருகிறேன் நான் மறைய நீ வா என சூரியனும் நிலவும் உலகை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அதிகாலை உதிக்கும் சூரியன் உயிர்ஜீவிகளின் அன்றாட வாழ்க்கையை உயிர்பிக்கச் செய்கிறது. உலகின் ஒரு நகரத்தில் மட்டும் வருகிற 60 […]

காணொளியை ஒன்றாக இணைந்து பார்க்க வசதியை அறிமுகம் செய்தது முகநூல்

  • June 7, 2021
  • 0 Comments

முகநூல் பயனாளர்கள் ஒன்றிணைந்து காளொணிகளைப் பார்வையிடும் வகையில் புதிய வசதி ஒன்றை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முகநூல் செயலியின் மெசஞ்சரில்(Messenger) வோச் ருகெதர் Watch Together எனும் புதிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஒன்றாக காணொளி ஒன்றைப் பார்த்து ரசிக்க முடியும். இதேபோன்று மேசஞ்சர் ரூம் (Messenger Rooms) மூலம் 50 பேர் ஒன்றாக உரையாடக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

திருமதி சின்னராசா தங்கரத்தினம்

  • June 7, 2021
  • 0 Comments

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா தங்கரத்தினம் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று கொம்மந்தறையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும், சகுந்தலாதேவி(இலங்கை), தவராசா(கனடா), சுதந்திராதேவி(இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி, யோகராணி(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், தங்கலட்சுமி(கனடா), சிவராசா(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவஞானம்(இலங்கை), கதிர்காமலிங்கம்(இலங்கை), நாகபூரணி(இலங்கை), தணிகாசலம்(கனடா) ஆகியோரின் […]

அறிவித்தல்கள் துயர்பகிர்வோம்

குமாரசாமி சிவலிங்கம்

  • June 5, 2021
  • 0 Comments

  ஊரிக்காடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவலிங்கம் அவர்கள் 04.06.2021 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற குமாரசாமி ஆட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்ற காத்தலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும் கமலாதேவியின் அன்பு கணவரும்  ,  ஜெயவதனி (இலங்கை), சுரேந்தர் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பகிரதன் (இலங்கை) ,மனோயா (கனடா),குந்தவி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சிவக்கொழுந்து சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்