Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்

கொரோனா தடுப்பூசி குறித்து நேயர்கள் பிபிசியின் சமூக வலைதள பக்கங்களில் கேட்ட கேள்விகளுக்கான நிபுணர்களின் பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் வேலூர் சிஎம்சியின் கிளினிக்கல் வைராலஜி துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் டி. ஜேகப் ஜான்.

1. தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் உடனடியாக பாதிப்பு வரவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பாதிப்புகள் வர வாய்ப்புண்டா?

பதில்: இல்லை. தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை மூன்று விதமாக எதிர்வினையாற்றும். அவை ஒவ்வாமை, உடலுக்கு கேடு விளைவித்தல், அல்லது நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்னையை உருவாக்குவது. ஒவ்வாமை என்பது ஒரு சில நாட்களில் வந்துவிடும். இரு வாரங்களுக்கு பிறகு அது குறைய தொடங்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான எதிர்வினைகள் சில காலத்துக்கு இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் சில புரோதத்திற்கு எதிராக மனித செல்களில் நோய் எதிர்ப்பு எதிர்வினையை உருவாக்கும். இது வழக்கத்திற்கு மாறான ஒரு எதிர்வினை. இதை ‘ஆட்டோ இம்யூனிட்டி’ என்று சொல்வார்கள். இது மிகவும் அரிதானதுதான். அதுபோல ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு தொடரலாம். ஒரு மாதத்திற்கு பிறகு தடுப்பு மருந்தால் எந்த எதிர்வினையும் ஏற்படாது.

2. ஏற்கனவே சைனஸ் மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாமா?

பதில்: ஆம். நிச்சயமாக. அதற்கும் தடுப்பு மருந்தின் மூலக்கூறுகளுக்கும் தொடர்பு இல்லை.

3. இந்த கொரொனா தடுப்பூசிகள் பூஞ்சை தொற்றை தடுக்குமா?

பதில்: நிச்சயமாக இல்லை. இருப்பினும் கோவிட் தொற்று தடுக்கப்பட்டால், கொரோனா தொற்று பாதிப்புடன் தொடர்புடைய நோய்களும் தடுக்கப்படும்.

4. தடுப்பூசியின் வீரியம் வயதுக்கு ஏற்ப மாறுபடுமா?

பதில்: பொதுவாக அனைத்து தடுப்பு மருந்துகளும் எல்லா வயதினருக்கும் நன்றாகவே செயல்படும். இருப்பினும் கோவிட் தடுப்பு மருந்துகளைப் பொறுத்தவரை குழந்தைகளின் உடலில் தடுப்பு மருந்து எவ்வாறு செயலாற்றுகிறது என்பது குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதேபோன்று பொதுவாக வயது காரணமாக முதியவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சற்று மந்தமாக செயல்படலாம்.

தடுப்பூசி நமது உடலில் எவ்வாறு செயலாற்றுகிறது?

பதில்: ஒரு வைரஸ் உடலில் தொற்றினால், ஆன்டிபாடிகள் மற்றும் டி செல்களின் வழியாக நோய் எதிர்ப்பு சக்தியின் மூலம் உடல் அதற்கு எதிர்வினையாற்றும். இங்கு பிரச்னை என்னவென்றால், தொற்று உங்களுக்கு நோய் ஏற்படும் ஆபத்தை உண்டாக்கும். அது மிதமானதாகவோ, சற்று அதிகமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம். சில சமயம் அது உயிருக்கு அச்சுறுத்தலாகக்கூட இருக்கலாம். அதே வைரஸ் இரண்டாவது முறையாக தொற்று ஏற்படுத்தினால் முன்பு ஏற்பட்ட தொற்றால் உருவான நோய் எதிர்ப்பு சக்தி அந்த நோயிலிருந்து நம்மை காக்கும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு கடந்தகால அனுபவத்தை நினைவில் வைக்கும் திறன் உண்டு.தடுப்பு மருந்து என்பது, நோயை உருவாக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். நோய் எதிர்ப்பு மண்டலம், வைரஸின் கட்டமைப்பு கூறுகளை அடையாளம் கண்டு நோயை உருவாக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு எதிர்வினையாற்றும்.

தடுப்பூசி போட்டப்பின்னும் தொற்றால் பாதிக்கப்படுவது ஏன்?

தடுப்பு மருந்தின் செயல்பாடு என்பது தொற்று வராமல் தடுப்பது என்பது இல்லை. தொற்றை மோசமாக்கி மருத்துவமனைக்கு செல்வது போன்ற நிலையையோ அல்லது இறப்பை ஏற்படுத்துவது போன்ற சூழலையோ தடுப்பதுதான் தடுப்பு மருந்தின் முக்கிய நோக்கம்.

ஆய்வுகளின் முடிவுகள்படி தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களில் மிக மிகக் குறைந்த சதவீதத்தில்தான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலேயும் மருத்துவமனைகள் செல்லும் அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் வெகு குறைவு. அவர்கள் குணமாகி வந்துவிடும் நிலைதான் உண்டு. தடுப்பு மருந்து செலுத்தி மிதமான தொற்றால் பாதிக்கப்பட்டால் அதை நாம் தடுப்பூசியின் தோல்வி என்று எடுத்து கொள்ளகூடாது.

பிபிசி தமிழ் இணைய தளத்திலிருந்து

You may also like

அறிந்து கொள்வோம்

Goggles & Shades for Girls

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut
அறிந்து கொள்வோம்

Best Natural and Organic Makeup

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Aliquam eros ante, placerat ac pulvinar at, iaculis a quam. Duis ut