Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அது
உயர்வுள்ளவன் செய்யும் செயல்
நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்
நாலு பேருக்கு நன்மை தரும் பணி

ஆண்டவன் தந்த அறிவினை கொண்டு
ஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!
உழைப்பவன் அரைவயிற்று கஞ்சிக்கு
வழியில்லை என்று அறிந்தும்
உன் பெருமை காட்ட வம்புக்காய் வலிந்து
ஆடம்பரம் செய்வோரே
ஆழ்ந்து சிந்தியுங்கள்!

நீங்கள் வள்ளலாக வேண்டாம்
வாடும் உறவுகளுக்கு
அள்ளிக் கொடுக்க வேண்டாம்
கிள்ளியேனும் கொடுத்துப்பாருங்கள்
கிளம்பும் உன்மனதில்
மகிழ்சியான ஆனந்தம்
அதுவே மனித நேயமானது மகிழ்வானது!

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

You may also like

படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்
படைப்பாக்கம்

நட்பு!

நேரிய நோக்குநேர்மைப் பேச்சு ஓங்கிய சிந்தனைஉள்ளதே நல்ல நடப்புக்கு அழகு! தன்தேவை கருதிதார்மீகப் பொறுப்பின்றிசுயநலம் கொண்டால்அதன் பெயர் நட்பாகாது! புரிதலும் தெரிதலும்புறம்பேசா செய்களும்கரிசனை கொண்டுகண்டறிந்த வாழ்வேநட்புக்கு ‌அழகாகும்!