Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

திலகேஸ்வரி அம்மா -31ம் நாள் நினைவு அஞ்சலி

அன்பு தம்பியின் கவிதை அஞ்சலி

நல்லதோர் வீணையாய் நம் வீட்டின் ஒளிவிளக்காய்
நம் மன இருள் அகற்றும் அகல் விளக்காய்- நீ இருந்து
நம்பிக்கை என்னும் ஒளிக்கீற்றால் நாம் வாழ்வை ஒளிர்வித்தாய்
நல்ல தருணம் இதுவென்று நம்மை விட்டு நீங்கிவிட்டாய்- என் அக்கா


சமுதாயத்தில் நாம் சான்றோனாய் வாழ எண்ணி
சாலச் சிறந்த கதைகள் பல சொல்லி
சப்தமின்றி நித்தம் எமை மகிழ்வித்தாய்
சமயம் வந்ததென்று எம்மை விட்டு சாய்ந்துவிட்டாய் – என் அக்கா


காலமெல்லாம் எம்மை காத்திருப்பாய் என்று இருந்தோம்
காலத்தின் கண் பட்டு கானல் நீர் ஆகிவிட்டாய்
கலங்க மாட்டோம் உன்னை எண்ணி களித்திருப்போம் – உன் நினைவுகளால்
கலங்கரை விளக்காய் இருந்து என்றென்றும் காத்திருப்பாய் – என் அக்கா

உன் நினைவால் உன் தம்பி

இது எமது உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த கம்பர்மலை, கொம்மந்தறை, மயிலியதனை, ஊரிக்காடு, கெருடாவில் ஆகிய ஊர்களில் வாழும் உறவினர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு லண்டனிலிருந்து இயங்கும் இணையத்தளம்.இந்த தளம் பல விடயங்களை உள்ளடக்கிய ஓர் சஞ்சிகையாக உருவாக்க பட்டுள்ளது. . ஊர்மக்கள் உங்கள் பிறந்தநாள் , திருமணநாள் மற்றும் பிற தகவல்களை எம்மிடம் தருவதன் மூலம் அவை கட்டணமின்றி எமது தளத்தில் பதிவிடப்பட்டு உலகளவில் எம் உறவினர்களுக்காக காட்சிபடுத்தபடும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்………தொடர்புகளுக்கு மின்னஞ்சல் oorum.uravum@gmail.com

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,