Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

விடுதலை

என்னைப்போல் தானே
நீங்களும்
வீடுதாண்டி
வெளியேறுவதையே
விடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்
எல்லா வீடும் ஒன்றுபோலில்லை
ஒரு வீடு சிறகுகள்
தருகிறது
ஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறது
ஒரு வீடு சிறைக்
கூடமாகிறது
என்னைப்போல் தானே
நீங்களும்
வீட்டுக்கு
வெளியேதான்
வாழ்வென்று ஒன்றிருப்பதாய்
நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்
அவரவர்க்கும்
உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்
அது
உட்புறமாய்
தாழிடப்பட்டிருப்பதும்
மறந்து வீணே
வாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்
இனி
திறக்க வேண்டியதும் மறுத்தால்
உடைத்துக்கொண்டு
வெளியேற வேண்டியதும்
தத்தமது இதயத்தின்
கதவுகளைத்தானே
தவிர
வீட்டின் கதவுகளை
அல்ல

—ரிஸ்கா முக்தார்—

You may also like

படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்
படைப்பாக்கம்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று