Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

கதிரித்தம்பி தங்கவேலாயுதம்

கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கதிரித்தம்பி தங்கவேலாயுதம், கொம்மந்தறை சனசமூக நிலையத்தின் ஸதாபகர்களில் ஒருவராகவும் சனசமூகநிலையம் தாபிக்கப்பட்ட நாள் முதல் அதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவரும் சனசமூக நிலையத்திற்கு தினசரி பத்திரிகை ஒழுங்காக வருவதற்கு முழுமூச்சாக செயற்பட்ட வரும் ஆவர். அமரர் சன சமூகநிலைய நிர்வாகத்தில் மட்டுமின்றி விவசாய சம்மேளனத்திலும் ஆலய நிர்வாகங்களிலும் பல காலங்கள் செயலாற்றி உள்ளார்.

இது மட்டுமன்றி சோதிடக்கலையும் சித்த வைத்தியக்கலையும் நன்கு அறிந்து எமது கிராம மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்கியுள்ளார். அன்னார் இறைவனடி சேர்ந்தமை எமது மக்களை பெரும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. அன்னாரின் பிரிவால் துயரத்திலிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் கிராம மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதோடு ஈமைகிரியைகள் நாளை காலை 08.00 மணிக்கு அவரது இல்லத்தில் (உபயகதிர்காமம், புலோலி) நடைபெற இருப்பதால் காலை 07.30 மணிக்கு கொம்மந்தறை சனசமூக நிலையத்தில் இருந்து பஸ் புறப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,