Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

நிகழ்வுகள்

‘கடிவாளமிட்ட கற்பனை” கவிதை நூல் வெளியீடு

பருத்தித்துறை வடமராட்சி வடக்கு, பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நிருஷாராணி பூங்குன்றனின் ‘கடிவாளமிட்ட கற்பனை” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கரணவாய் மூத்தவிநாயகர் திருமண மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

பருத்தித்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் ம.ப.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பருத்தித்துறை பிரதேச செயலர் ந.திருலிங்கநாதனும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலர் இ.பிரதாபன், வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி. ச.லதுமீரா மற்றும் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சி.நித்தியா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேற்படி கவிதை நூலை பருத்தித்துறை பிரதேச செயலர் ந.திருலிங்கநாதன் வெளியீட்டு வைக்க முதல் பிரதியை சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி. ச.லதுமீரா பெற்றுக்கொண்டார். நூலின் வெளியீட்டுரையையும் நயப்புரையையும் யாழ். பல்கலைக்கழக மொழிபெயர்ப்பு கற்கைகள் பீடத்தின் இறுதியாண்டு மாணவி செல்வி. சோகினி கிருபாகரன் நிகழ்த்தினார்.

You may also like

அறிந்து கொள்வோம் செய்திகள் நிகழ்வுகள் படைப்பாக்கம்

சுடரியின் நூல்கள் வெளியீடும் அறிமுகமும்

வவுனியா மாவட்ட மேலதிகப் காணிப் பதிவாளரும் பிரபல எழுத்தாளருமான சுடரி ( சிவகௌரி ) எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இரு நூல்களின் அறிமுகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை