Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

தொழில் நுட்ப தகவல்கள்

Google எச்சரிக்கை! மொத்தம் 11 ஆப்களில் Joker மால்வேர்: உடனே டெலீட் செய்யுங்கள்.!

இப்போது வரும் புதிய ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக நமது தினசரி வேலைகளை மிகவும் சுலபமாக செய்து முடிக்கிறது ஒரு சில ஆப் வசதிகள். ஆனாலும் பிளே ஸ்டேரில் நீங்கள் ஆப் வசதியை பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு சில ஆப் வசதிகள் நமது தகவல்களை திருடும்.

ஸ்மார்ட்போன்களை பாதிக்கும் ஆபத்தான மால்வேர் பரவல் சம்பவங்கள் வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் மோசமான ஜோக்கர் மால்வேர் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளது. அதாவது அண்மையில் வெளிவந்த தகவல் என்னவென்றால், பிளே ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் ஜோக்கர் மால்வேர் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக இந்த தகவலை முதலில் வெளியிட்டது ZDNet என்பது குறிப்பிடத்தக்கது. ஜோக்கர் மால்வேர் பொதுவாக பயனர்களின் முக்கியத் தகவலை திருடும். அதாவது தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன. மேலும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை கூட இந்த ஜோக்கர் மால்வேர் திருடும் என்பது குறிப்பிடத்தக்கது

இப்போது ஜோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட அந்த 11 ஆப்களின் பட்டியலைப் பார்ப்போம்.

Free Affluent Message

PDF Photo Scanner

delux Keyboard

Comply QR Scanner

PDF Converter Scanner

Font Style Keyboard

Translate Free

Saying Message

Private Message

Read Scanner

Print Scanner

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 11 ஆப்களில் ஜோக்கர் மால்வேரை கண்டறிந்ததும் கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

தொழில் நுட்ப தகவல்கள்

காணொளியை ஒன்றாக இணைந்து பார்க்க வசதியை அறிமுகம் செய்தது முகநூல்

முகநூல் பயனாளர்கள் ஒன்றிணைந்து காளொணிகளைப் பார்வையிடும் வகையில் புதிய வசதி ஒன்றை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முகநூல் செயலியின் மெசஞ்சரில்(Messenger) வோச் ருகெதர் Watch Together
தொழில் நுட்ப தகவல்கள்

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – View Once அம்சம் அறிமுகம்!

வாட்ஸ் அப் செயலியானது தனது தளத்தை மேம்படுத்துவதோடு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு பதிப்பு பயனர்களுக்கு View Once என்னும்