Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

செல்வச்சந்திரன் சின்னத்துரை

உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும்
கொண்ட இளைப்பாறிய உதவி அதிபர் (யாழ்.கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறை)
செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற பரமேஸ்வரியின் அன்பு கணவரும்
காலம்சென்றவர்களான சின்னத்துரை , இராசம்மா தம்பதிகளின் செல்வ மகனும்
காலம் சென்ற செல்லமாணிக்கம் மற்றும் துரைராஜா அவர்களின் அன்பு சகோதரரும் இராஜலச்சுமி , ருக்குமணி அவர்களின் மைத்துனரும்
செல்வேஸ்வரன் , ஸ்ரீதர் , காலம் சென்ற சத்தியநாதன் மற்றும் சத்தியதேவி சச்சிதானந்தன் , சசிகலாதேவி
ஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்
கதாநாயகி , சாந்தா , காலம் சென்ற சிவநேசன் மற்றும் உஷா , நந்தசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
வினோத் (சிந்துவின் கணவர்) மற்றும் நிலானி , மரியா பிரகாசினி , மரின் பிரகாஷ் , சிந்து , மணியரசன் , நித்திலன் , நயந்தன் , கஜனி , ஜீவனா , கவிதன் ஆகியோரின் அன்பு பேரனும்
சிவின் , டிவினா ஆகியோரின் பூட்டனும் ஆவார் .

இறுதிக்கிரியை நிகழ்வு
இடம்:
Colfeian Ground (Horn Park)
76C Eltham Road,
Eltham, SE12 8UE
நேரம்: காலை 8:00 – மதியம் 10:00

🔸 தகன நிகழ்வு
இடம்:
Hither Green Crematorium
Verdant Lane,
London, SE6 1TP
நேரம்: மதியம் 11:00 – 12:00

தகனத்திற்குப் பிறகு,
எங்களுடன் உணவிலும் நினைவூட்டல் நிகழ்விலும்
கலந்து கொள்ளும் வகையில்,
உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:
76C Eltham Road ,
Eltham , SE12 8UE
தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: ஆனந்தன் 0044 7961178652 (லண்டன்)

அமரர் செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்களின் இறுதிக்கிரிகை நிகழ்வுகளை நேரடியாக 25.05.2025 அன்று
காலை 7:30 மணியிலிருந்து கீழ்வரும் தளத்தில் பார்வையிடலாம்.

https://youtu.be/VgJnUgJ9b6k

கண்ணீர் அஞ்சலிகள்

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

Lux ஆனந்தராஜா
ஆன்ம இளைப்பாற்ற வேண்டி ஆண்டவரிடம் மன்றாடுகின்றோம்.
அன்னாரது குடும்பத்தினர் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தலைவர் தங்கராஜா
அருணகிரிராஜாவும் குடும்பத்தினரும்

பிறரால் செய்ய இயலாத பெருமைக்குரிய செயல்களை செய்து முடிக்கும் சாதனையாளர்களே நீந்தார் என்ற பெரியோர்கள். அப்படிச் செய்ய இயலாத துறவிகள் சிறியவர்கள்.
—திருக்குறள் – அதிகாரம் 3 —

Our heartfelt tribute and condolences to departed SELVATHTHAAN. He and his family sacrificed their whole life for the struggle of Sri Lankan Tamils.

K.சிவநாதன்(சுதர்சன்)

தியாகம் நிறைந்த பிள்ளைகளை
உலகுக்கு தந்த தந்தை!
கல்வி புகட்டி
அறிவான பிள்ளைகளை
ஊருக்கு தந்த ஆசான்!
நிரந்தர துயிலுக்குள் நிலைத்துவிட்டார்…
அவரது நினைவுகளுக்குள் மூழ்கி
அவரது அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு நன்றி சொல்வோம்

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,